ஊழல் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தப் போகிறது கோப்ராபோஸ்ட்!
டெல்லி: ஊழல் அரசியல் தலைவர்கள் பலரை இன்று அம்பலப்படுத்தப் போவதாக கோப்ராபோஸ்ட் புலனாய்வு செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
ஸ்டிங் ஆபரேஷன் மூலம் இவர்களை அம்பலப்படுத்தவுள்ளதாம் கோப்ராபோஸ்ட். டெல்லியில் இன்று இவர்கள் குறித்த விவரங்களை வெளியிடப் போவதாகவும் அது தெரிவித்துள்ளது.
லஞ்சம் வாங்குவது போலவும், பிற சட்டவிரோத செயல்களில் தொடர்பு உள்ளது போலவும் இந்த காட்சிகளில் இடம் பெறுகிறதாம். கட்சி பாகுபாடற்று பல தலைவர்களும் இதில் சிக்கியுள்ளனர்.

இந்த ஊழல்வாதிகள் தொடர்பான காட்சிகளை திரையிட்டுக் காட்டி அம்பலப்படுத்தப் போவதாக கோப்ராபோஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்த ஊழல்வாதிகள் பட்டியலில் நம்ம தலைவர்கள் யாரேனும் இருப்பார்களோ என்று பல கட்சிகளும் பீதியில் உள்ளனராம். குறிப்பாக பாஜகவினர் தான் பெரும் பீதியில் மூழ்கியுள்ளனராம்.
சமீபத்தில்தான் கோப்ராபோஸ்ட்டும், குலைல் என்ற இன்னொரு இணையதளமுநம் சேர்ந்து அமித் ஷா குறித்த பரபரப்புத் தகவலை வெளியிட்டன. அதாவது, நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அமித் ஷா, இளம் பெண் ஒருவரை வேவு பார்க்க உத்தரவிட்டது தொடர்பான தகவல் அது. அது பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
மேலும் ஆபரேஷன் ப்ளூ வைரஸ் என்ற பெயரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூலிக்காக அரசியல்வாதிகளுக்கு மாரடிக்கும் அவலத்தையும் அம்பலப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கி நாறப் போவது யாரோ....
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications