ஏன் மறைச்சே.. ஏன் என்னை ஏமாத்துனே.. உலுக்கி எடுத்த பாத்திமா.. கடைசியில் தற்கொலை!
சித்தூர்: "ஏன் என்கிட்ட இருந்து மறைச்சே.. ஏன் என்னை ஏமாத்தினே" என்று கேள்வி கேட்டு பாத்திமா காதலனை உலுக்கி எடுத்துவிட்டார்.. இறுதியில் ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலையே செய்து கொண்டார்.
சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சர்தார். இவரது மகள் பாத்திமா.. 19 வயதாகிறது.. மதனப்பள்ளியில் ஒரு தனியார் காலேஜில் பி.காம்.2வது வருஷம் படித்து வந்தார்.

இவர் இப்ராகிம் என்பவரை விரும்பினார்.. இப்ராகிம் இவர் வீட்டு பகுதியிலேயே வசிப்பவர்.. ஆட்டோ ஓட்டுகிறார்.. 2 வருடமாக அதிதீவிரமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த சமயத்தில்தான், இப்ராகிமுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, 2 குழந்தைகள் உள்ள சமாச்சாரம் பாத்திமாவுக்கு தெரியவந்தது.. விஷயத்தை தெரிந்து கொதித்து போனார் பாத்திமா.. இப்ராகிடம் சென்று, "ஏன் என்னை ஏமாற்றினே.. ஏன் என்கிட்ட கல்யாணம் ஆனதை மறைச்சே.." என்று கேட்டார். இதுதான் இருவருக்கும் தகராறாக உருமாறியது.
இந்த சண்டைக்கு பிறகு பாத்திமா மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார்.. காலேஜ்-க்கும் போகவில்லை. இந்த ஏமாற்றத்தை அவரால் தாங்கவே முடியவில்லை.. அதனால் வீட்டின் ஒரு ரூமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் பிணமாக தொங்குவதை கண்டு பெற்றோர் அலறி கதறினர்.. சித்தூர் 2-டவுன் போலீசாரும் தகவலறிந்து வந்து சடலத்தை மீட்டனர்.
பாத்திமா இறந்தது தெரிந்ததுமே இப்ராகிம் ஆளை காணோம்.. அதனால், பாத்திமாவின் பெற்றோர், உறவினர்கள் இப்ராகிமை கைது செய்யக்கோரி பாத்திமாவின் சடலத்துடன் டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையில் ஆவேசமாக ஈடுபட்டனர். இப்ராகிமை உடனேகைது செய்கிறோம் என்று போலீசார் வாக்கு தந்ததுடன், தலைமறைவானவரையும் தேடி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications