குஜராத்தில் மோடி மீது மலர் தூவிய கர்னல் சோபியா குரேஷி குடும்பத்தினர்.. நெகிழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு இன்று சென்றுள்ளார். வதோதராவில் நடந்த பேரணியில் பிரதமர் மோடிக்கு நம் நாட்டின் ராணுவ கர்னல் அதிகாரியான சோபியா குரேஷியின் குடும்பத்தினர் பூக்கள் தூவி வரவேற்றது அனைவரையும் நெகிழ வைத்தது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி குஜராத் சென்றுள்ளார். இன்றும், நாளையும் பிரதமர் மோடி குஜராத்தில் இருப்பார்.

colonel-sofiya-qureshis-family-showers-flower-petals-on-pm-modi-at-vadodara-roadshow-in-gujarat

இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரமதர் மோடி குஜராத்தின் வதோதராவில் இன்று காரில் நின்று பேரணி சென்றார். அப்போது பாஜகவினர் பிரதமர் மோடிக்கு உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.

இந்த சமயத்தில் நம் நாட்டின் ராணுவ அதிகாரியாக கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர் திரண்டு வந்து பிரதமர் மோடி மீது மலர்தூவி வரவேற்றனர். சோபியா குரேஷியின் தாய் ஹலிமா பிபி, தந்தை தாஜ் முகமது குரேஷி, சகோதரி சைனா சன்ரா,சகோதரர் சஞ்சய் குரேஷி உள்ளிட்டவர்கள் வந்து பிரதமர் மோடியை மலர்தூவி வரவேற்றனர்.

சோபியா குரேஷி யார் என்றால் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மோதலின்போது அதிக கவனம் பெற்றவர். அதாவது இருநாடுகள் இடையேயான போரின்போது நம் நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் சேர்ந்து 2 பெண் அதிகாரிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து கள நிலவரம் பற்றி விளக்கம் அளித்தனர். அதில் ஒருவர் தான் ராணுவ கர்னல் சோபியா குரேஷி.

இந்த கர்னல் சோபியா குரேஷி என்ற ராணுவ அதிகாரி யார் என்றால் 'எக்சர்சைஸ் ஃபோர்ஸ் 18' என்ற பன்னாட்டு இராணுவ பயிற்சியில் இந்திய இராணுவக் குழுவை வழிநடத்திய முதல் பெண் என்பதும், பாகிஸ்தானுக்கு எதிரான மோதலின்போது மக்களுக்கு புரியும்படி விபரங்களை பொறுமையாக எடுத்து கூறியவரும் ஆவார்.

இதுபற்றி சோபியோ குரேஷியின் சகோதரி சைனா சன்ரா கூறுகையில், ‛‛பிரதமர் மோடியுடன் நல்ல சந்திப்பை நடத்தியதாக நாங்கள்ந நினைக்கிறோம். பெண்களுக்கு அதிகாரம் வழங்க பிரதமர் மோடி பணிகளை மேற்கொண்டு வருகிறார். சோபியா என்னுடைய இரட்டை சகோதரி. அவள் நாட்டுக்காக ஏதாவது செய்யும்போது அது அனைவருக்கும் உத்வேகம் தருகிறது. இனி சோபியா என் சகோதரி அல்ல. இந்த நாட்டுக்கான சகோதரி'' என்று பெருமையாக கூறினார்.

சோபியா குரேஷியின் தாய் ஹலிமா பிபி கூறுகையில், ‛‛பிரதமர் மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி. பெண்களான இந்த நாட்டின் சகோதரிகள் அனைவரும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ஹேப்பியாகி உள்ளனர்'' என்றார். இதுபற்றி சோபியா குரேஷியின் தந்தை தாஜ் முகமது குரேஷி கூறுகையில், ‛‛பிரதமர் மோடி எங்களை அங்கீகாரம் செய்தார். அவர் எங்களை வாழ்த்தினார். நாங்களும் அவரை வாழ்த்தினோம்'' என்றார்.

சோபியா குரேஷியின் சகோதரர் சஞ்சய் குரேஷி கூறுகையில், ‛‛இது சிறந்த தருணமாக இருக்கிறது. நாங்கள் பிரதமர் மோடியை முதல் முறையாக பார்த்துள்ளோம். எங்களை பார்த்ததும் பிரதமர் மோடி சைகை செய்து வரவேற்றார். என் சகோதரிக்கு இந்த வாய்ப்பை வழங்கிய நமதுராணுவத்துக்கும், இந்திய அரசுக்கும் நான் நன்றி கூறுகிறேன். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பயங்கரவாதிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் என் சகோதரி இருப்பதை விட வேறு என்ன சிறப்பு வேண்டும்?'' என பூரித்துப்போனார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+