ரிசல்ட் வந்ததும்.. ராஜஸ்தானில் வீச காத்திருக்கும் அரசியல் புயல்! பாஜக அஸ்திரம் முஸ்லிம் இட ஒதுக்கீடு
ஜெய்ப்பூர்: ஜூன் 4க்குப் பிறகு ராஜஸ்தானின் அரசியலில் பெரும் புயல் வீசக் காத்துக் கொண்டுள்ளது. ஓபிசி பிரிவில் உள்ள 14 முஸ்லீம் பிரிவினருக்கான இடஒதுக்கீடு பலன்களை நீக்க பாஜக அரசு காய் நகர்த்தி வருகிறது.
சமூக நீதித் துறை அமைச்சர் அவினாஷ் கெலாட், "ஓபிசி" ஒதுக்கீட்டைக் குறைத்து முஸ்லிம் பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு தவறானது என்று சமீபத்தில் அதிரடியாக தெரிவித்திருந்தார். லோக்சபா தேர்தல் முடிவு வெளியாக உள்ள ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு ஒரு குழு இந்த முடிவை மறுபரிசீலனை செய்யும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் 1947 முதல் 2013 வரை 14 முஸ்லிம் பிரிவினர் ஓபிசி பிரிவில் சேர்க்கப்பட்டனர். இந்த இடஒதுக்கீடு தொடர்பான சுற்றறிக்கை அரசிடம் உள்ளது, அது மறுஆய்வு செய்யப்படும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, எந்த சாதியினரும், வகுப்பினரும் மத அடிப்படையில் இடஒதுக்கீடு சலுகைகளைப் பெறக்கூடாது. அரசியல் திருப்திக்காக இடஒதுக்கீட்டை காங்கிரஸ் பயன்படுத்தியதாகவும், இது தொடர்பாக பல புகார்கள் வந்துள்ளதாகவும் அமைச்சர் கெலாட் குறிப்பிட்டுள்ளார். சரிபார்ப்பு வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்த மதிப்பாய்வுக்காக ஒரு சிறப்புக் குழு அமைக்கப்படும், இது விதிகளின் அடிப்படையில் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றார் அவர்.
ராஜஸ்தானில், 91 சாதிகள் மற்றும் வகுப்புகள் தற்போது OBC இடஒதுக்கீட்டின் மூலம் பயனடைகின்றன. அவர்களில் 14 முஸ்லீம் பிரிவினர்: நாகர்ச்சி-டமாமி (முஸ்லிம்), ராணா (முஸ்லிம்), பயதி (பரோட் முஸ்லிம்), சிந்தி முஸ்லிம், சிபாஹி (முஸ்லிம்), ஃபகிர் (கல்லறைத் தொழிலாளர்கள்), தோபி (முஸ்லிம்), மியோ, கயம்கானி, நாகௌரி, பிஸ்தி, மங்கனியர், லகேரா, மிராசி, கதாத், மெஹ்ரத், சீட்டா, கோடாட் மற்றும் பிசயதி ஆகியவை இந்த பிரிவுகளாக கூறப்படுகின்றன.
முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையிலான பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இப்போது இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.மேற்கு வங்காளத்தில் 2010க்குப் பிறகு வழங்கப்பட்ட OBC சான்றிதழ்களை ரத்து செய்த கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை ராஜஸ்தானிலும் பேசுபொருளாகியுள்ளது. மத அடிப்படையில் மட்டுமே ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அது செல்லாது என்றும் கொல்கத்தா ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
77 முஸ்லீம் வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகத் தேர்ந்தெடுப்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் அவமதிப்பதாக நீதிமன்றம் கூறியிருந்தது. மேற்கு வங்க அரசின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக பாஜக கூறியபோதிலும், வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனிடையே இந்த இட ஒதுக்கீடு விவகார நெருப்பு ராஜஸ்தானில் பரவியுள்ளது. இந்த அரசியல் கிளைமேட் அனைத்துக் கட்சியினராலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது, ஏனெனில் இது மாநிலத்தின் இடஒதுக்கீடு கொள்கைகளை மறுவடிவமைக்கலாம் மற்றும் பல சமூகங்களை பாதிக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications