நள்ளிரவு அக்கப்போர்.. 8 எம்எல்ஏக்களை வளைத்து தூக்கிய பாஜக.. ம.பி. யையும் கோட்டைவிடுமா காங்கிரஸ்?
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க 8 எம்எல்ஏக்களை வலுக்கட்டாயமாக பாஜக அழைத்து சென்றுவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 8 பேரில் 4 எம்எல்ஏக்கள் ஐடிசி மவுரியாவிலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் இரு சுயேச்சைகள் கர்நாடகாவில் உள்ள சொகுசு விடுதியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாயாவதி கட்சியின் பெண் எம்எல்ஏ தப்பி வந்துவிட்டார்.
Recommended Video
மத்திய பிரதேசம், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சி நேரடியாக ஆட்சியில் உள்ளது. ஏனைய சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது. தற்போது மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கர்நாடகத்தில் செய்தது போல் ஆட்சியை கவிழ்த்துவிட்டு பாஜக ஆட்சி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதற்காக மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எம்எல்ஏக்களுக்கு பாஜக போன் போட்டு ரூ 25 முத்ல 30 கோடி வரை பேரம் பேசியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியிருந்தார். இதை பாஜக மறுத்தது.
#WATCH Haryana: Madhya Pradesh Ministers&Congress leaders Jitu Patwari&Jaivardhan Singh leave from ITC Resort in Gurugram's Manesar,taking suspended BSP MLA Ramabai with them.8 MLAs from MP are reportedly being held against their will by BJP at the hotel,Ramabai being one of them pic.twitter.com/VUivVHsaA4
— ANI (@ANI) March 3, 2020
ஆதரவு எம்எல்ஏக்கள்
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க 8 எம்எல்ஏக்களை வலுக்கட்டாயமாக குர்கான் ஹோட்டலில் வைத்திருப்பதாக பாஜக மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் ஜீத்து பட்வாரி கூறுகையில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவை டெல்லிக்கு விமானம் மூலம் பாஜக அழைத்து சென்றுள்ளது. இவை அனைத்தும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஆதரவு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் நோக்கத்தில் செய்யப்பட்டுள்ளது.

8 எம்எல்ஏக்கள்
பாஜக மூத்த தலைவர்களான சிவராஜ் சிங் சவுகான், நரோட்டம் மிஸ்ரா, பூபேந்திர சிங், ராம்பால் சிங் உள்ளிட்டோர் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் சதி திட்டத்தில் 8 எம்எல்ஏக்களை அழைத்து சென்று ஹோட்டலில் தங்கவைத்துள்ளனர். 8 பேரில் 4 எம்எல்ஏக்கள் ஐடிசி மவுரியாவிலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் இரு சுயேச்சைகள் கர்நாடகாவில் உள்ள சொகுசு விடுதியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாஜகவால் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்பட்டோம் என எம்எல்ஏக்கள் எங்களிடம் கூறினர். அவர்களை பாஜகவின் பிடியிலிருந்து மீட்க முயற்சிக்கிறோம் என தெரிவித்தார்.

பாஜகவினர் தாக்கியதாக குற்றச்சாட்டு
திக்விஜய் சிங் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான ஜெய்வர்த்தன் சிங் ஹரியானாவில் உள்ள ஹோட்டலுக்கு சென்று எம்எல்ஏக்களை சந்தித்தனர். இதுகுறித்து மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் கூறுகையில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. பாஜக நினைப்பது எதுவும் நடக்காது. எம்எல்ஏக்கள் மீண்டும் வந்துவிடுவர். பிஎஸ்பி பெண் எம்எல்ஏ ராமாபாயை பாஜகவினர் தாக்கியதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் 8 பேரில் இந்த பெண் எம்எல்ஏ தைரியமாக போராடி எங்களிடமே தப்பி வந்துவிட்டார் என்றார்.

இலவசமாக கிடைக்கும் பணம்
பாஜக அழைத்து சென்ற 8 பேரில் 4 பேர் காங்கிரஸ், ஒருவர் சுயேச்சை, மற்றவர்கள் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜவாதி கட்சியைச் சேர்ந்தோர் என கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை முதல் இந்த குதிரை பேரம் தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து கமல்நாத் கூறுகையில் பண பேரம் குறித்து எங்கள் எம்எல்ஏக்கள் என்னிடம் புகார் அளித்தனர். இலவசமாக கிடைக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என கூறினேன் என்றார்.

காங்கிரஸ் அரசுக்கு ஆபத்தா
என்னதான் பாஜகவின் செயல்களால் காங்கிரஸ் ஆட்சிக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என கூறினாலும் கடந்த கால சம்பவங்களை பார்க்கும் போது காங்கிரஸ் அரசு ஆட்சியில் நீடிக்குமா இல்லை கவிழ்க்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கர்நாடகத்திலும் இதே போன்ற சூழல் எழுந்து குமாரசாமி ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

இரு தொகுதிகள் காலி
மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட ம.பி. சட்டசபையில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களையும், பகுஜன் சமாஜ் 2 இடங்களையும் சமாஜ்வாதி ஒரு இடத்தையும் சுயேச்சை 4 இடத்தையும், பாஜக 107 இடங்களையும் பிடித்துள்ளது. இரு தொகுதிகள் காலியாக உள்ளது. எனவே 228-இல் பெரும்பான்மைக்கு 115 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறது. பிஎஸ்பி, எஸ்பி, சுயேச்சை ஆதரவுடன் 121 பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. தற்போது 8 எம்எல்ஏக்கள் பாஜக அழைத்து சென்றுவிட்டது. ஒரு வேளை இவர்கள் பாஜகவுக்கு விலை போய்விட்டால் ஆளும் கூட்டணி கட்சியின் பலம் 113 ஆக இருக்கும். இதனால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications