ராஜஸ்தானில் இதை எதிர்பார்க்கல! காங்கிரஸ்- பாஜக கடும் போட்டி! கடைசியில் கரை சேர்வது யார்! புது சர்வே
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கே எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து டைம்ஸ் நவ் நவ்பாரத் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இப்போது காங்கிரஸ் தலைமையிலான அசோக் கெலாட் அரசு ஆட்சியில் இருக்கிறது. அங்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குத் தேர்தல் ஜுரம் ஆரம்பித்துள்ளது.

அங்குக் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடியாகப் போட்டி இருப்பதால், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் எனப் போராடும் நிலையில், மறுபுறம் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க போராடுகிறது.
ராஜஸ்தான் தேர்தல்: இதற்கிடையே இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்த டைம்ஸ் நவ் நவ்பாரத் இடிஜி கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் இப்போது கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என இந்த சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.
இந்த டைம்ஸ் நவ் சர்வே-இன் படி இரு கட்சிகளும் சுமார் 42 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே எந்தளவுக்கு கடும் போட்டி என்றால் இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 0.60% மட்டுமே இருக்குமாம். அந்தளவுக்கு இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடும் போட்டி: அங்கு மொத்தம் 200 இடங்கள் இருக்கும் நிலையில், எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்க 101 இடங்களாவது தேவை. இந்த தேர்தலில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 91-101 இடங்களும் பாஜகவுக்கு 95-105 இடங்களும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 15 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் இத கட்சிகள் 3-6 இடங்களைக் கைப்பற்றும் என்றும் அந்த டைம்ஸ் நவ் சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.
எங்கே: பிராந்தியம் வாரியாக பார்க்கும் போது துப்தாரில், பாஜக 27-29 இடங்களிலும், காங்கிரஸ் 28-30 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல மார்வாரில் காங்கிரஸை காட்டிலும் பாஜகவுக்குத் தான் அட்வான்டேஜ். அங்கே பாஜக 30-32 இடங்களில் வெல்லும். மறுபுறம் காங்கிரஸ் 27-29 இடங்களில் மட்டுமே வெல்லும் என இந்த சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.
மேவார் பிராந்தியத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி கடுமையாகச் சரிசமமாகவே இருக்கும். காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு கட்சிகளும் தலா 20-22 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஹடோதி பிராந்தியத்தில் பாஜக 8-10 இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த பிராந்தியத்தில் காங்கிரசுக்கு 7-9 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என அந்த சர்வே-இல் கூறப்பட்டுள்ளது. ஷேகாவதி பிராந்தியத்தில் பாஜக 10-12 இடங்களிலும், காங்கிரஸின் 9-11 இடங்களிலும் வெல்லும் என அதில் கூறப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது காங்கிரஸ் கட்சிக்கு 91-101 இடங்களும் பாஜகவுக்கு 95-105 இடங்களும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் இப்போதே இரு தரப்பும் பிரசாரத்தைத் தீவிரமாக ஆரம்பித்துள்ளது. இங்குத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப் போகிறது என்பது இன்னும் சில மாதங்களில் தெரிய வரும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications