பாஜகவினர் முதல்வராக வேண்டாம்.. ஹரியானாவில் தலைகீழ் மாற்றம்.. காங்கிரஸ் தலைவருக்கு அமோக ஆதரவு
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் முதல்வராக யார் வேண்டும்? என்ற கேள்விக்கு மக்கள் பதிலளித்துள்ளனர். இதில் பாஜகவின் தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனியை விட காங்கிரஸ் கட்சியின் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு 10 சதவீதம் பேர் அதிகமாக ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில் தான் பூபிந்தர் சிங் ஹூடா யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
ஹரியானாவில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக நயாப் சிங் சைனி உள்ளார். விரைவில் இந்த மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் மாதம் ஹரியானாவுக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால் ஹரியானாவில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இத்தகைய சூழலில் தான் ஹரியானா சட்டசபை தேர்தல் தொடர்பாக People Pulse Research Organization சார்பில் அந்தமாநிலத்தில் மக்களிடம் நேரடியாக கருத்துகள் கேட்டு சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சர்வே என்பது ஜூன் 25ம் தேதி தொடங்கி ஜூலை 24ம் தேதி வரை ஒரு மாதம் வரை நடந்தது. Haryana Mood Survery 2024 என்ற பெயரில் நடத்தப்பட்ட சர்வேயில் ஹரியானா முதல்வராக யார் வேண்டும்? என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த சர்வேயின்போது மக்கள் பூபிந்தர் சிங் ஹூடா தான் முதல்வராக வேண்டும் என்று அதிகமானவர்கள் விரும்பி உள்ளனர். அதன்படி பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு 40 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இவர் யார் என்று பார்த்தால் ஹரியானாவின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். முன்னாள் முதல்வரான இவர் தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இவர் இதற்கு முன்பு 2005 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் முதல்வராக செயல்பட்டார்.
இதற்கு அடுத்தப்படியாக 2வது இடத்தில் நயாப்சிங் சைனி உள்ளார். இவருக்கு 30 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நயாப் சிங் சைனி ஓபிசி சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் பாஜக மாநில தலைவராகவும், எம்பியாகவும் இருந்த நிலையில் மனோகர் லால் கட்டாருக்கு பதில் முதல்வராக்கப்பட்டார். கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவில் செயல்பட்டு வருகிறார். ஹரியானாவில் பாஜகவை வலுப்படுத்திய தலைவர்களில் இவரும் முக்கியமானவர்.
இந்த வரிசையில் 3வது இடத்தில் இருப்பவர் மனோகர் லால் கட்டார். இவர் 2014 முதல் 2014 மார்ச் மாதம் வரை முதல்வராக செயல்பட்டார். அதன்பிறகு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது மத்திய மின்சாரத்துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில் தான் ஹரியானாவின் புதிய முதல்வராக மனோகர் லால் கட்டார் வர வேண்டும் என்று 9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகு 4வது இடத்தில் செல்ஜா குமாரி இருக்கிறார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் தலைவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் தனி அதிகாரம் கொண்ட சமூக நீதி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது சிர்சா தொகுதி எம்பியாக உள்ள செல்ஜா குமாரிக்கு 7 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications