சாத்தான் வேதம் ஓதுகிறது: காங்கிரஸை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய வெங்கையா நாயுடு
டெல்லி: நில மசோதா பற்றி காங்கிரஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது என்று அவை தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. ஆனால் நில மசோதா விவசாயிகளின் நலனை கருத்தில் வைத்து தான் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில்,

காங்கிரஸ்
நிலம் கையகப்படுத்தும் மசோதா பற்றி காங்கிரஸ் தவறான தகவல்களை பரப்பி வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்யில் இருக்கையில் பல சட்ட திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் நில மசோதாவை அறிமுகப்படுத்தியதை ஜனநாயக கொலை என்று கூற எதிர்கட்சிகளுக்கு உரிமை இல்லை.

சாத்தான்
நில மசோதா பற்றி காங்கிரஸ் விமர்சிப்பது சாத்தான் வேதம் ஓதுவது போன்று ஆகும். அவர்கள் எண்ணற்ற தடவை அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் 456 அவசர சட்டங்களை அவர்கள் கொண்டு வந்துள்ளனர்.

அவசர சட்டம்
ஜவஹர்லால் நேருவின் ஆட்சியின்போது 77 அவசர சட்டங்களும், இந்திரா காந்தி ஆட்சியில் 77 அவசர சட்டங்களும், ராஜீவ் காந்தி ஆட்சியில் 2 மாதங்களுக்கு ஒரு முறை 3 அவசர சட்டங்கள் என 35 அவசர சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

பொய்
பொய்யான தகவல்களை பரப்புவதற்கும் ஒரு அளவு உண்டு. ஒரு பொய்யை 10 முறை கூறினால் அது உண்மையாகிவிடாது. நாங்கள் ஜனநாயக கொலை செய்ததாக கூறும் நீங்கள் அவசர நிலையை கொண்டு வந்து லட்சக்கணக்கான மக்களை சிறையில் அடைத்ததற்கு பெயர் என்ன?. நீங்கள் பழையவற்றை எல்லாம் மறந்துவிட்டீர்கள்.

தாக்கு
எங்களை விமர்சிக்கும் முன்பு நீங்கள் செய்ததை நினைத்துப் பாருங்கள். பல பாவங்களை செய்துவிட்டு புனித யாத்திரை செல்வது போன்று உள்ளது உங்களின் செயல். நீங்கள் என்னவெல்லாம் கொண்டு வந்தீர்கள் என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம் என்றார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications