காங்கிரஸ் கட்சி ஊழல்வாதிகளுக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளது: பாஜக குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேர்மையுடன் நடந்து கொள்வதாக கூறிவரும் காங்கிரஸ் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைவர்களை லோக்சபா தேர்தலில் களம் இறக்கியுள்ளது விந்தையாக இருக்கிறது என விமர்சித்துள்ளது பாஜக.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்யசபா எதிர்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி கூறியதாவது :-

சண்டீகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால், இமாசல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள்.

Congress has again given opportunities to tainted leaders: BJP

ரயில்வே தேர்வு வாரிய முறைகேட்டில் பவன்குமார் பன்சால் மீது குற்றம் சுமத்தப்பட்டதை யடுத்து அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலகினார்.

ஆதர்ஷ் ஊழலில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாண் மீது குற்றம் சுமத்த சிபிஐ அந்த மாநில ஆளுநரிடம் அனுமதி கோரியது. ஆனால் அந்த மாநிலத்தில் காங்கிரûஸ காப்பாற்றும் நோக்கில், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தற்போது, லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அசோக் சவாண் போட்டியிடுகிறார். வீரபத்ர சிங் மீதான குற்றச்சாட்டுக்கும் வலுவான ஆதாரங்கள் உள்ளன' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+