For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐந்து மாத சம்பளத்தை திருப்பி அனுப்பிய டெல்லி காங். எம்.எல்.ஏ.!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ தனக்கு அளித்த 5 மாத சம்பளமான ரூ.2, 67,495-ஐ அம்மாநில துணைநிலை ஆளுநருக்கு திருப்பி அனுப்பினார்.

டெல்லி மாநிலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு 49 நாளில் கவிழ்ந்ததால் அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. 5 மாதங்களுக்கும் மேலாக குடியரசுத்தலைவர் ஆட்சி நடைபெற்று வந்தபோதிலும், சட்டசபைத் தேர்தலை நடத்த மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை.

ஆனால், உச்சநீதிமன்றம் சட்டசபையை முடக்கி வைத்தபோதிலும் எம்.எல்.ஏ.க்கள் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குகின்றனர் என்று சாடியிருந்தது. இந்த நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலின்போது பாட்லி தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவேந்திர யாதவ், தனக்கு அளித்த 5 மாத சம்பளமான ரூ.2,67,495-ஐ துணைநிலை ஆளுநருக்கு திருப்பி அனுப்பினார். ஆனால், ஐந்து மாத சம்பளமாக 5 ரூபாய் மட்டுமே வைத்துக்கொண்டார்.

அதேசமயம் இவரைப் போல வேறு எம்.எல்.ஏக்கள் யாரும் சம்பளத்தைத் திருப்பி அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Congress MLA Devendra Yadav has returned his five-month salary to the chief secretary but other Congress MLAs may not follow suit, saying they were working round the clock since becoming public representatives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X