காங். ஆட்சியில் 6 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதா?.. நாட்டு மக்களுக்கே தெரியாது.. மோடி நக்கல்
ஜெய்ப்பூர்: காங்கிரஸ் ஆட்சியில் 6 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திருப்பதாக சொல்லப்படுவது, நாட்டு மக்களுக்கே தெரியாது என்று பிரதமர் மோடி கிண்டலாக தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம், கரவுலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய பிரதமர், பாஜக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக சொல்லப்பட்ட போது பொங்கிய காங்கிரஸ், தற்போது, நாங்களும் 6 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி உள்ளதாக கூறுகிறது. இது தீவிரவாதிகளுக்கும் தெரியாது. பாகிஸ்தானுக்கும் தெரியாது. ஏன், இந்தியர்களுக்கே தெரியாது என்று சிரிப்பாக தெரிவித்தார்.
மேலும், 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் சாதிக்க முடியாததை, டீ விற்று பிரதமரான நான் சாதித்துக்காட்டியதால் காங்கிரஸ் கட்சியினரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.

தீவிரவாதிகளுக்கு அச்சம்
காங்கிரஸ் ஆட்சியில், தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றதால் இந்திய நகரங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததாக விமர்சனம் செய்த பிரதமர் மோடி, பாஜக ஆட்சி காலத்தில் தீவிரவாதிகள் அஞ்சி நடுங்குவதாக தெரிவித்துள்ளார்.

தைரியமில்லாத அரசு
கடந்த 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் பொதுத்தேர்தல் காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபில் போட்டிகள் தென் ஆப்ரிக்காவுக்கு இடம் மாற்றப்பட்டதாக கூறிய மோடி, தைரியமில்லாத அரசு என்று விமர்சனம் செய்தார்.

ஐபிஎல் போட்டி
தற்போது மக்களவை தேர்தலுடன் ராமநவமி, ஹனுமன் ஜெயந்தி, ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகள் கொண்டாடப்பட்டாலும் இடையூறு இன்றி, உள்நாட்டிலேயே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்

நிவாரண நிதி
ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரூ.1000 கோடி நிவாரண நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடலோர காவல்படை, கடற்படை மற்றும் விமானப்படையினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
-
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்?












Click it and Unblock the Notifications