அடக்கொடுமையே.. முதல்வரே எம்எல்ஏக்களோடு கட்சி மாறிய அவலம்.. அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை இழந்த காங்
இடாநகர்: திரைப்பட கிரைம் காட்சிகளை விஞ்சும் வகையில் திடுக்கிடும் திருப்பங்களோடு அருணாச்சல அரசியல் நடந்து கொண்டுள்ளது. முதல்வர் பீமா காண்டு தலைமையில் 43 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து விலகி, அருணாசலப்பிரதேச மக்கள் கட்சியில் இணைந்ததால், அங்கு நிலவிவந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்குவந்துள்ளது.
60 இடங்களைக் கொண்ட அருணாசலப் பிரதேச சட்டசபையில் 45 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியமைத்திருந்தது. முதல்வராக நபம் துகி பொறுப்பேற்றார். இந்நிலையில்தான் ஆரம்பித்தது, முதல் திருப்பம். திடீரென நபம் துகிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் கொடியுயர்த்தினர். இதனால் அம்மாநில அரசியலில் குழப்பம் நிலவியது.

இதை பயன்படுத்திக்கொண்ட மத்திய அரசு, அருணாச்சல பிரதேச ஆட்சியை கலைத்துவிட்டு இவ்வருடம் ஜனவரி மாதம் 26ஆம் நாள் முதல் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. இடையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 11 பேரின் ஆதரவைத் திரட்டினர். கலிகோபுல் என்பவரை முதல்வராகத் தேர்ந்தெடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சி விலக்கப்பட்டது.
மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதையும், பின் விலக்கிக்கொள்ளப்பட்டதையும் எதிர்த்து நபம் துகி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், நபம் துகிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். இதையடுத்து அவர் மீண்டும் முதல்வரானார். இந்நிலையில் ஜூலை 16க்குள் அவரது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென மாநில பொறுப்பு கவர்னரான ததகத்த ராய் உத்தரவிட்டார்.
நபம் துகிக்கு கட்சிக்குள் எதிர்ப்பு நிலவியதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் முன்னரே அவர் பதவி விலகினார். எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே நபம் துகி பதவி விலகினார். இதையடுத்து கலிகோபுல் உள்பட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பினர். காங்கிரசின் 45 எம்.எல்.ஏ.க்களும் ஒன்று கூடி கட்சி மேலிடம் எடுத்த முடிவின்படி மறைந்த முதல்வர் டோர்ஜி காண்டுவின் மகனான பீமா காண்டுவை சட்டசபை கட்சி தலைவராகவும், முதல்வராகவும் தேர்ந்தெடுத்தனர்.
இந்த சூழ்நிலையில் கலிகோ புல், எதிர்பாராதவிதமாக தற்கொலை செய்துகொண்டார். பதவி கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மாநில முதல்வரான பீமா காண்டு தலைமையில் 43 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து விலகி, அருணாசலப்பிரதேச மக்கள் கட்சியில் இணைந்ததால், அங்கு நிலவி வந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்குவந்துள்ளது. முதல்வரே கட்சி மாறிய விவகாரம், காங்கிரசுக்கு, தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இப்போது நபம் துகி மட்டுமே அருணாச்சல பிரதேசத்தில் எஞ்சியுள்ள ஒரே காங்கிரஸ் எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications