ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து.. புது ரூட்டை கையில் எடுக்கும் காங்கிரஸ்! பலிக்குமா கனவு?
ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க கோரி, ஆளும் தேசிய மாநாட்டு கட்சி சட்டப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி புது ரூட்டை கையில் எடுத்துள்ளது. அதாவது, வீதியில் இறங்கி பேரணி நடத்த முடிவு செய்து இருக்கிறது. நாளை முதல் இந்த பேரணி தொடங்கும் எனவும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து
இதில் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக உமர் அப்துல்லா உள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் பெற்று தருவதில் உறுதியாக உள்ளதாக கூறிய அந்தக்கட்சி அதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அதுபோக ஜம்மு காஷ்மீர் கேபினட்டில் மாநில அந்தஸ்து கோரி தீர்மானமும் போடப்பட்டுள்ளது.
பேரணி நடத்த காங்கிரஸ் முடிவு
இப்படி சட்டப்பூர்வமன நடவடிக்கைகளில் தேசிய மாநாட்டு கட்சி இறங்கியிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி வேறு ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் எனக் கோரி தொடர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளது. நாளை முதல் தொடர்ந்து 10 முதல் 15 நாட்களுக்கு தொடர்ந்து பேரணியில் ஈடுபடுவோம் என்று ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தரியா ஹமீது கர்ரா கூறியுள்ளார்.
இந்த பேரணி என்பது அமைதியான முறையில் இருக்கும் எனவும் தனித்துவமான போராட்டமாகவும் இருக்கும் எனவும் கூறினார். மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் நினைவுப்படுத்தும் வகையிலாக இந்த பேரணி அமையும் எனவும் கூறினார். ஜம்மு காஷ்மீரில் தினம் தினம் உள்ள பிரச்சினைகளை மையப்படுத்தியும் இந்த போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடியின் ரியாக்ஷன்
சோன்மார்க் சுரங்க திறப்பு நிகழ்ச்சியின் போது கூட உமர் அப்துல்லா இதை வெளிப்படையாகவே வலியுறுத்தினார். பிரதமர் மோடி இது குறித்து நேரடியாக பதில் எதுவும் அளிக்காமல் உரிய நேரத்தில் அளிக்கப்படும் என்று மட்டும் கூறினர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்த கோரியும் மாநில அந்தஸ்து கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தேசிய மாநாட்டு கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.
அதேவேளையில் காங்கிரஸ் கட்சி வீதியில் இறங்கி மக்களிடம் முன்வைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கட்சியை வலுபடுத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் வென்றது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications