ராகுலை ‘ஜோக்கர்’ என்று கிண்டலடித்த கேரள முன்னாள் அமைச்சர் சஸ்பென்ட்!

தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது குறித்து கேரள மாநில முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் முஸ்தபா நேற்று முன்தினம் கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ‘தேர்தல் பிரசாரத்தின்போது, கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, தனிக்குழுவை சார்ந்தே பிரசாரம் செய்தார். ஒரு ‘ஜோக்கர்' போல அவர் செயல்பட்டது வெற்றியை தரவில்லை. எனவே அவர் கட்சி பதவியில் தொடரக்கூடாது. உடனடியாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது அவரை கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பகிரங்கமாக போர்க்கொடி தூக்கினார்.
இது கேரள காங்கிரஸ் கட்சியினரிடையே மட்டுமல்லாமல், தேசிய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் முஸ்தபா மீது காங்கிரஸ் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சுதீரன் தெரிவிக்கையில், ‘முன்னாள் அமைச்சர் முஸ்தபா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார். அவருடைய பேச்சுக்கு அவரிடம் விளக்கம் பெறப்படும் என்றார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications