காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததுமே சாதிவாரி பொருளாதார கணக்கெடுப்பு.. உறுதியாகச் சொன்ன ராகுல் காந்தி!
பதான்: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் சாதிவாரி மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவோம் என ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.
மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

முதற்கட்ட வாக்குப்பதிவில் 102 தொகுதிகளிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 88 தொகுதிகளிலும் என மொத்தம் இதுவரை 190 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. மே 7ஆம் தேதி குஜராத்தில் உள்ள 27 லோக்சபா தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் குஜராத் மாநிலத்தில்தான் அதிகபட்ச தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலம் பதான் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சந்தன்ஜி தாக்கூரை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.
ராகுல் காந்தி பேசுகையில், "நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 90 சதவீதம் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி மக்கள் உள்ளனர். ஆனால் கார்ப்பரேட், மீடியா, தனியார் மருத்துவமனைகள், தனியார் பல்கலைக்கழகங்கள் அல்லது அரசு உயர் பதவிகள் போன்றவற்றில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு, பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவோம்.
அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஆளும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் திட்டமிடுகின்றன. இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக அவர்கள் உள்ளனர். இவர்களின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது" என ராகுல் காந்தி பேசியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications