இமாச்சல பிரதேசத்தில் பாஜக நோ.. காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும்.. இந்தியா டுடே எக்ஸிட் போல்
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் அந்த கட்சி 30-40 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா டுடே வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
மலைப்பிரதேசங்களையும் பனிபடர்ந்த ரம்மியமான இயற்கை சூழலையும் கொண்ட இமாசல பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாசல பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது.

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் விடாப்படியாய் இருக்கும் பாஜக இதற்காக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டது. அதேநேரத்தில் பறிகொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டி வருகிறது. ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தலில் போடியிட்டன. தேர்தலில் 65.92 சதவீத வாக்குகள் பதிவானது.

எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு
கடந்த மாதம் 12 ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை வரும் வியாழக்கிழமைதான் நடைபெறுகிறது. இமாசல பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். குஜராத் இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் விவரத்தை காணலாம்.

காங்கிரசுக்கு வெற்றி
அதன்படி இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பில் காங்கிரஸ்க்கு வெற்றி வாய்ப்பு என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 30-40-ல் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக 24-34 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. அதேவேளையில் பிற கட்சிகள் 4-8 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதா..
இமாசல பிரதேசத்தில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கே சாதகமாக வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பு காங்கிரஸ் கட்சி 30-40 இடங்கள் வெல்லும் என்று கூறியிருக்கிறது. இதனால், இமாசல பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதா? என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இருந்தாலும் மக்களின் உண்மையான தீர்ப்பு வரும் 8 ஆம் தேதி தான் தெரியும் என்பதால் அன்றைய தினம் தான், இமாசல பிரதேசத்தில் அடுத்த ஆண்டுகள் யார் ஆட்சி அமைகிறது என்பது உறுதியாக தெரியும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications