சிறுமியை சீரழிக்க முயன்று காவல் நிலைய மாடியிலிருந்து தள்ளிவிட்ட கான்ஸ்டபிள்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 12ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று அவரை காவல் நிலையத்தின் மாடியில் இருந்து கீழே தள்ளிய கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் மாவட்டத்தில் உள்ள உஜ்ஹானியைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவர் கடந்த 15ம் தேதி மாலை அவர் டியூஷனுக்கு சென்றுள்ளார். அப்போது கான்ஸ்டபிளாக இருக்கும் கவ்ரவ் டைட்லர் சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Constable Arrested For Allegedly Throwing Minor Girl Off Roof of Police Station in Badaun

அங்கு அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவிக்கவே கவ்ரவ் அவரை காவல் நிலைய்ததின் மாடிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கீழே தள்ளிவிட்டார்.

இதில் சிறுமியின் தலையில் பலத்த அடிபட்டதுடன், அவரது முதுகு மற்றும் இடுப்பு எலும்பு உடைந்துவிட்டது. படுகாயம் அடைந்த சிறுமி பரேலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் கவ்ரவை கைது செய்துள்ளனர். பதாவ்ன் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கவ்ரவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+