ஸ்ரீசாந்த் தந்தையானார்... மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது!
கொச்சி: சூதாட்டத்தில் சிக்கி கிரிக்கெட் வாழ்க்கையை இழந்து சிறைக்குச் சென்று பின்னர் ஜாமீனில் வெளியாகி திருமணமும் செய்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தின் மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
அன்னையர் தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக நேற்று குழந்தை பிறந்துள்ளது ஸ்ரீசாந்த் மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி குமாரியை சந்தோஷமடைய வைத்துள்ளதாம்.

இதுகுறித்து ஸ்ரீசாந்த் வெளியிட்டுள்ள டிவிட்டில், அன்னையர் தினத்தையொட்டி எங்களுக்கு அருமையான ஒரு பெண் தேவதை குழந்தையாக வந்து பிறந்துள்ள செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.
புவனேஸ்வரி தேவி, ராஜஸ்தானைச் சேர்ந்த அரச குடும்பத்துப் பெண் ஆவார். இருவருக்கும் 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது.
ஸ்ரீசாந்த் மீதான சூதாட்ட வழக்கில் இந்த மாத இறுதியில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கிலிருந்து தான் விடுதலையாவேன் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் ஸ்ரீசாந்த்.
27 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 87 விக்கெட்களையும், 53 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 75 விக்கெட்களையும், 10 டுவென்டி 20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்களையும் ஸ்ரீசாந்த் வீழ்த்தியுள்ளார்.
சூதாட்ட வழக்கில் சிக்கிய பின்னர் அவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications