சாலையில் கிடக்கும் சடலங்கள்! கொரோனாவில் சின்னாபின்னமான சீனா! கனடா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்!
ஒட்டாவா : சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்த முடியாத அளவு பெருகிவரும் நிலையில் பல்வேறு உலக நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்த வகையில் சீனாவில் இருந்து கனடா வரும் பயணிகளுக்கு 5ஆம் தேதி முதல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அந்நாட்டு அரசு அறிவித்து இருக்கிறது.
கடந்த ஒரு மாதமாக சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருகிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதோடு பரவலானதும் அதிகரித்திருக்கிறது.
சீனாவில் மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவின் மாறுபட்ட வேரியன்டான ஓமைக்ரான் பிஎஃப் 7 காரணமாக சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஎஃப் 7
இதன் காரணமாக சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனை கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு கூறியது,. இதனையடுத்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடும் கட்டுப்பாடுகள்
தற்போது வரை சீனா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நாட்டில் உச்சகட்ட கண்காணிப்பு நிலவி வரும் நிலையில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிமனித இடைவெளி, முகக் கவசம் அணிதல், தடுப்பூசி பூஸ்டர் செலுத்துவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

25 கோடி பேர் பாதிப்பு
இந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் 20 நாட்களில் மட்டும் சுமார் 25 கோடி பேருக்கு சீனாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின. அதே நேரத்தில் அந்நாட்டு அரசு கொரோனா குறித்த விவரங்களை வெளியிடாததால் சீனாவில் தற்போது என்ன நிலைமை நிலவுகிறது என்பது குறித்தும் மற்ற உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும். இந்தியா கனடா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்யும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்
இதனால் சீனா, ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம் என பல நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்து இருக்கின்றன. இந்த நிலையில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. இங்கிலாந்து ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் கனடாவிலும் சீனப் பயணிகள் கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என முடிவு செய்திருக்கிறது.

கொரோனா நெகட்டிவ்
ஏற்கனவே இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கட்டுப்பாடுகளை சீன பயணிகளுக்கு விதித்திருக்கும் நிலையில் கனடாவும் தற்போது இந்த முடிவை எட்டி இருக்கிறது. சீனா மட்டுமல்லாது மக்காவ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் கனடா வருவதற்கு முன் இரண்டு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயணிகள் அனைவரும் கொரோனா தொற்று இல்லா சான்றிதழை கொண்டு வர வேண்டும் எனவும் இந்த புதிய விதி 5ஆம் தேதி முதல் அமலாகும் என அந்நாட்டு சி டிவி தெரிவித்திருக்கிறது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications