கன்வர் யாத்திரை அனுமதிக்காதீங்க-கொரோனா 3-வது அலையை வலிய கூப்பிடாதீங்க- உத்தரகாண்ட் அரசுக்கு அட்வைஸ்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கன்வர் யாத்திரைக்கு அனுமதி கொடுத்து கொரோனா 3-வது அலையை வலிய போய் வரவழைக்காதீர்கள் என்று இந்திய மருத்துவர் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.
உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவில் ஜூலை 4-ந் தேதியே கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாகவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டிருந்த அறிக்கையில், எந்த நேரத்திலும் இந்தியாவில் கொரோனா 3-வது அலை தொடங்கலாம்;; அதனால் சுற்றுலாத் தலங்கள், யாத்திரைகள், திருவிழாக்களுக்கு அனுமதி கொடுத்து கொரோனாவை பரவ வழிவகுத்துவிட வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில அரசுக்கு அம்மாநில இந்திய மருத்துவர் சங்க கிளை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாதயாத்திரை நிகழ்வான கன்வர் யாத்திரைக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் புனித தலங்களான ஹரித்வார், ரிஷிகேஷுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்ல இந்த அனுமதி வழங்கப்பட்டது.
இத்தகைய அனுமதியை உத்தரகாண்ட் அரசு தவிர்க்க வேண்டும். இப்படி பொதுமக்களை ஒன்றுகூட அனுமதித்தால் கொரோனா 3-வது அலையை நாமே வலியப் போய் வரவழைப்பதாகிவிடும் என அறிவுறுத்தி உள்ளனர்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications