கொரோனா.. காங் எம்எல்ஏவால் வந்த சிக்கல்.. தனிமைப்படுத்தப்படும் முதல்வர்.. குஜராத்தில் பெரும் பரபரப்பு
காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவருக்கு குஜராத்தில் கொரோனா வைரஸ் ஏற்பட்ட காரணத்தால் குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபாணி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
காந்திநகர்: காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவருக்கு குஜராத்தில் கொரோனா வைரஸ் ஏற்பட்ட காரணத்தால் குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபாணி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் மாநிலங்களில் மிக மோசமான மாநிலம்தான் குஜராத். இங்கு கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை. ஆனால் இந்தியாவில் குஜராத்தில்தான் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
குஜராத்தில் மொத்தம் 650 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 59 பேர் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். 563 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 29 பேர் பலியாகி உள்ளனர்.

எம்எல்ஏவிற்கு கொரோனா
இந்த நிலையில்தான் குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கேட்வாலா கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளார். கதியா - ஜமால்பூர் தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ ஆவார் இவர். இவருக்கு கடந்த செவ்வாய் கிழமை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது . இவரை இப்போது அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பாஜக முதல்வர்
இதனால் தற்போது அம்மாநில பாஜக முதல்வர் விஜய் ரூபாணி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார். இந்தியாவில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் முதல் முதல்வர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இனி இவர் அரசு மீட்டிங் எதிலும் கலந்து கொள்ள மாட்டார். அதிகாரிகளை சந்திக்க மாட்டார். போன் மூலம் மட்டுமே ஆலோசனைகளை செய்வார் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீட்டிங் நடந்தது
இதற்கு காரணம் இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கேட்வாலா கடந்த செவ்வாய் கிழமை குஜராத்தில் முதல்வர் நடத்திய மீட்டிங் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். முதல்வருக்கு மிக அருகில் இவர் அப்போது அமர்ந்துள்ளார். அன்று மாலையே இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இவர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலருக்கு கை கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷாக்கிங்
இதனால் தற்போது இந்த எம்எல்ஏக்கள் எல்லோரும் தங்களை தனிமைப்படுத்தும் முடிவில் இருக்கிறார்கள். அதேபோல் பாஜகவின் குஜராத் மாநில அமைச்சர்களான உள்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரையும் இவர் சந்தித்து உள்ளார். இதனால் அவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த சம்பவம் குஜராத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications