காற்றில் வேகமாக பரவும்.. 2 மோசமான கொரோனா வகை இணைந்து உருவான புது "வேரியண்ட்".. வியட்நாமில் கலக்கம்!
ஹனோய்: வியட்நாமில் புதிய மோசமான உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா காற்றில் வேகமாக பரவும் திறன் கொண்டது என்று வியட்நாம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் 2019 டிசம்பரில் உருவானதில் இருந்தே பல முறை உருமாற்றம் அடைந்துள்ளது. மியூட்டேஷன் என்று அழைக்கப்படும் இந்த மாற்றம், கொரோனா ஒருவரின் உடலில் இருந்து இன்னொருவரின் உடலுக்கு செல்லும் போது ஏற்படும் மாற்றம் ஆகும்.
கொரோனாவின் ஸ்பைக் புரோட்டீன், அதன் ஆர்என்ஏ என்று ஒவ்வொரு விஷயமும் மியூட்டேஷனில் மாற்றம் அடைய வாய்ப்புள்ளது. அதாவது கொரோனா வைரஸ் அப்டேட் ஆவதே மியூட்டேட் என்று அழைக்கப்படும்.

வேரியண்ட்
ஒவ்வொரு முறை கொரோனா வைரஸ் இப்படி மியூட்டேட் ஆகும் போதும் புதிய வேரியண்ட் உருவாகும். இதுவரை பல வேரியண்ட்கள் இப்படி உருவாகி உள்ளன. ஆனால் 10-20 வேரியண்ட்கள் மட்டும் மக்கள் இடையே அதிகமாக பரவி வருகிறது. B.1.222, B.1.619, D614G, B.1.1.7 என்று நிறைய வேரியண்ட்கள் இந்தியாவிலும், யுகேவிலும், அமெரிக்காவிலும் அதிகம் பரவியது.

மோசம்
ஒவ்வொரு முறை கொரோனா மியூட்டேட் ஆகும் போதும் சமயங்களில் அது அதிக பலம் கொண்டதாக மாறும் அல்லது பலம் இழந்ததாக மாறும். இந்த நிலையில் வியட்நாமில் புதிய மோசமான உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகை வைரஸ் மற்றும் யுகேவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகை வைரஸின் கூட்டு என்று கூறப்பட்டுள்ளது.

யுகே
இந்தியாவில் கண்டறியப்பட்ட வகை b1.617 என்று அழைக்கப்படும். யுகேவில் கண்டறியப்பட்ட வகை b117 ஆகும். இந்த இரண்டும் ஒன்றாக சேர்ந்து உருவான புதிய வகை ஹைபிரிட் வேரியண்ட்தான் இந்த புதிய வியட்நாம் வகை கொரோனா என்று கூறப்படுகிறது. இந்த புதிய வகை கொரோனா காற்றில் வேகமாக பரவும் திறன் கொண்டது என்று வியட்நாம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வியட்நாம்
இது காற்றில் வேகமாக பரவுகிறது, ஆய்வக சோதனையில் இது அதிக ஆபத்து கொண்டதாக இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது. கொரோனா முதல் அலையின் போது அதை எளிதாக வென்ற நாடுகளில் வியட்நாமும் ஒன்று. ஆனால் வியட்நாமில் இரண்டாம் அலை கொரோனா மிக மோசமாக பரவியது.

ஏப்ரல்
கடந்த ஏப்ரலில் அங்கு இரண்டாம் அலை ஏற்பட்டது. இதற்கு இந்த புதிய வகை கொரோனாதான் காரணம் என்கிறார்கள். அங்கு கடந்த ஏப்ரலுக்கு பின் 3500க்கும் அதிகமான கேஸ்கள் வந்தது. 47 மரணங்கள் ஏற்பட்டது. இது முதல் அலையில் ஏற்பட்ட கேஸ்களை விட அதிகம் ஆகும். இதனால் அங்கு மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications