கொரோனா கட்டுப்பாடு எதிரொலியால் சபரிமலைக்கு 'சாமிகள்' வருகை பெருமளவில் குறைந்தது!
பம்பை: கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதால் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் வருகை பெருமளவில் குறைந்துவிட்டது.
கொரோனா பரவல் குறையாத நிலையில் கட்டுப்பாடுகளுடன் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மண்டல பூஜை, மகர பூஜைகளுக்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்கிற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. அப்படி கொரோனா சான்றிதழ் பெறாதவர்கள், கேரளாவின் நிலக்கல்லில் இறங்கி பரிசோதனை செய்துவிட்டு சான்றிதழ் பெறலாம்.
பொதுவாக சபரிமலைக்கு பெருவழிப்பாதை, வழக்கமான நீலிமலை-அப்பாச்சிமேடு பாதை, புல்லுமேடு பாதைகள் வழியாக பக்தர்கள் வருகை தருவார்கள். இம்முறை இந்த மூன்று பாதைகளும் அடைக்கப்பட்டு பம்பையில் சுப்பிரமணிய பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் பம்பையில் புனித நீராடிவிட்டுதான் ஐயப்ப பக்தர்கள் மலையேறுவர். இம்முறை பம்பையில் புனித நீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கெடுபிடிகளால் ஐயப்ப பக்தர்கள் வருகை பெருமளவில் குறைந்துவிட்டது. மேலும் வழக்கமான நாட்களில் 1,000 பேரும் சனி, ஞாயிறு நாட்களில் 2,000 பேரும்தான் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
பொதுவாக இந்த சீசனில் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து செல்வர். ஆனால் இம்முறை வெறும் 9,000 பேர்தான் சபரிமலைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications