கர்நாடகாவில் பண்ணியதை அப்படியே ம.பியிலும் செய்யும் காங்கிரஸ்.. கமல்நாத்தின் அதிரடி பிளான்!
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ஊழல் மலிந்து காணப்படுவதாக ஆளும் பாஜக அரசு மீது குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ், கர்நாடகாவில் கையாண்ட யுக்தியை இங்கும் பின்பற்ற தொடங்கியுள்ளது. இது குறித்த விவரத்தை இங்கே பார்க்கலாம்.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். மத்திய பிரதேசத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாஜக முயன்று வருகிறது. அதே வேளையில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி வியூகங்களை வகுத்து வருகிறது.

மத்திய பிரதேசத்தில் பாஜக அரசு, 50 சதவீத கமிஷன் பெறுவதாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். கர்நாடக சட்டமன்ற தேர்தல் சமயத்திலும் இதேபோன்றதொரு, பிரசாரத்தை ஆளும் கட்சியாக இருந்த பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் முன்னெடுத்தது. அதாவது, 40 சதவீத கமிஷன் பெறுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி பிரசாரம் செய்தது.
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த விவகாரம் நன்றாக கை கொடுத்தது. நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. அந்த வகையில் அரசு பணிகளை முடித்து கொடுக்கும் ஒப்பந்ததாரர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் மத்திய பிரதேச மாநில பாஜக அரசு 50 சதவீத கமிஷன் பெற்று ஊழல் செய்வதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கர்நாடகாவில் கை கொடுத்த மேட்டரை வைத்து மத்திய பிரதேசத்திலும் பாஜகவை ஒரு கை பார்த்து விடலாம் என்பது, காங்கிரசின் பிளானாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி, கடந்த 11 ஆம் தேதி தனது "எக்ஸ்" (ட்விட்டர்) சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார். மத்திய பிரதேசத்தில் எந்த ஒரு பணியை செய்ய வேண்டும் என்றாலும் 50 சதவீத கமிஷன் கேட்கிறார்கள் என குற்றம் சாட்டி, காண்ட்ராக்டர்கள் அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது தொடர்பான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
இதையடுத்து, பிரியங்கா காந்தி மீது மத்திய பிரதேச அரசு, அவதூறு வழக்குப் பதிவு செய்தது. இதனால், கொதித்து போன காங்கிரஸ், பாஜக அரசுக்கு எதிரான விமர்சனத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது. அதாவது, மத்திய பிரதேச முன்னள் முதல்வர் கமல் நாத் இன்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டார்.
அதில், ஊழல் மலிந்து காணப்படுகிறது.. ஊழல் விகிதம் 50%" என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது. பின்னர் இது குறித்து பேசிய கமல்நாத், " மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் , விவசாயிகளை ஏமாற்றி விட்டார், இளைஞர்கள், தொழில் அதிபர்கள் எனை அனைவரையும் ஏமாற்றிவிட்டார். ஊழலால் பாதிக்கப்படாத ஒரு நபர் கூட மாநிலத்தில் இல்லை" என்றார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்கு தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்ட நிலையில், காங்கிரஸ் - பாஜக இடையே மாறி மாறி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications