வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை சமாளிக்க முடியாத பாஜக.. உ.பி இடைத்தேர்தலில் படுதோல்வி
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
லக்னோ: வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை சமாளிக்க முடியாத பாஜக உத்தர பிரதேச இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்து இருக்கிறது.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
பாஜகவின் இந்தத் தோல்விக்கு பின் எதிர்க்கட்சிகளின் கூட்டணி முக்கியமாக உள்ளது. இந்தக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தால் பாஜக பெரும் சிக்கலையே சந்திக்க நேரிடும்.

பெரிய கூட்டணி
உ.பி. இடைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. சமாஜ்வாதி கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்தது. இதனால் தேர்தல் மும்முனை போட்டியானது. அங்கு காங்கிரஸ் கட்சி இப்போது படு வீக்காக இருப்பதால் இந்த இடைத் தேர்தல் பாஜக - சமாஜ்வாதி கூட்டணி இடையிலான போட்டியாகவே இருந்தது.

பார்முலா
பாஜக கடந்த தேர்தல்களில் என்ன பார்முலாவை பயன்படுத்தி வந்ததோ அது மொத்தமாக முடிவுக்கு வந்து இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றாக கூடினால் பாஜகவை எளிதாக வெல்ல முடியும் என்று இந்த தேர்தல் வெற்றி காட்டி இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் பாடம்
எதிர்க்கட்சிகள் தனியாக நின்றதால் இவ்வளவு நாட்களை ஓட்டுகள் பிரிந்து வந்தது. இதை வைத்துதான் பாஜக எப்போதும் வெற்றி பெற்றது. ஆனால் கடந்த கால தேர்தல் தோல்விகளில் இருந்து இப்போது எதிர்க்கட்சிகள் பாடம் கற்றுக் கொண்டு இருக்கிறது. அது இந்த தேர்தலில் பிரதிபலித்துள்ளது.

அடுத்த வருடம்
இந்த தேர்தல் வெற்றி காரணமாக இந்த கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டணி வாக்குகளை கவர்ந்தது எதிர்கால கூட்டணிக்கு வழிவகை செய்து இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications