மே. வங்கத்தில் மார்க். கம்யூ படு வீக்.. காங்கிரஸுடன் கூட்டணி வைக்க சோம்நாத் சட்டர்ஜி அட்வைஸ்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பலவீனமாக இருப்பதால் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதுதான் சரியானதாக இருக்கும் என்று முன்னாள் மூத்த இடதுசாரித் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக திகழ்ந்தவர் முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி. மார்க்சிஸ்ட் கட்சியுடன் முரண்பாடு ஏற்பட்டு காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவர் 2008ஆம் ஆண்டு கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

அதன் பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இழந்த ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த காங்கிரஸுடன் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி அமைக்கக் கூடும் எனக் கூறப்பட்டு வருகிறது. இது குறித்து 37 ஆண்டுகளுக்குப் பின்னர் கொல்கத்தாவில் தற்போது நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாட்டில் விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளது.
இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாஜி இடதுசாரித் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, மார்க்சிஸ்ட் கட்சியில் சீதாராம் யெச்சூரியால் மாற்றங்களை கொண்டுவந்துவிட முடியும். ஆனால் பொலிட்பீரோவில் அவருக்கு பெரும்பான்மை இருக்கிறதா? என்பது சந்தேகமே.
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் சிறப்பு மாநாடு அக்கட்சிக்கு வலிமையைத் தரலாம். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை வீழ்த்த இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும். தற்போதைய நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி தனித்து வெல்லும் நிலையில் மேற்கு வங்கத்தில் வலுவானதாக இல்லை என்றார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை.. பெண்களுக்கு இனி மாதம் ₹3000 உதவி.. அறிவித்த மேற்கு வங்க அரசு! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications