ஜம்மு காஷ்மீரில் வேட்டை: பயங்கரவாதிகளின் வீடுகள் வெடிவைத்து தகர்ப்பு-200 'ஸ்லீப்பர் செல்கள்' கைது!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் படுகொலையைத் தொடர்ந்து அங்கு பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் 7 வீடுகள் வெடிவைத்து தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டன; மேலும் பயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல்லாக இருந்த 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு உறவுகளை மத்திய அரசு துண்டிப்பதாக அறிவித்துவிட்டது. பாகிஸ்தானும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிம்லா ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்தது. இதனால் இரு நாடுகளிடையே போர் மூளும் என்கிற பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதனிடையே ஜம்மு காஷ்மீரில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளைத் தேடி கண்டுபிடித்து அழித்தொழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு அவர்களது வீடுகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டும் வருகின்றன.
மேலும் அனந்தநாக் உள்ளிட்ட பல பகுதிகளில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல்லாக பதுங்கி இருந்த 200க்கும் மேர்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பஹல்காம் கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ20 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் வீடு வீடாக பயங்கரவாதிகளை தேடி கண்டறியும் நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் மும்முரமாக தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதனிடையே ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டசபை சிறப்புக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த சட்டசபை கூட்டத்தில், பஹல்காம் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் சட்டசபையை கூட்டுவதற்கான உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளார்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications