அன்புக்குரியவர்களை இழந்த வலிக்கு ஆறுதல்! "ஒன்இந்தியா" வழங்கும் Obituary சேவை!
சென்னை: வாழ்வில் மிகவும் ஆழமான, ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பது அன்புக்கும் பாசத்திற்கும் உரிய ஒருவரைப் பிரிவதுதான். நேற்றுவரை நம்முடன் வாழ்ந்து, நம் ஒவ்வொரு அசைவிலும் நிறைந்திருந்தவர்களின் மறைவு, இதயத்தில் ஆறாத காயத்தை விட்டுச் செல்கிறது. இந்தக் கடினமான தருணங்களில், உங்கள் துயரத்தில் பங்கெடுத்து, அந்தப் பிரிவின் வலியைச் சற்றேனும் ஆற்றுப்படுத்த, "ஒன்இந்தியா" உங்களுக்கு ஒரு புதிய பாதையைத் திறந்துள்ளது. ஆம்.. உங்கள் பிரியமானவர்களுக்கு ஒரு நிரந்தர அஞ்சலியைச் செலுத்த, உணர்வுகளால் நிரம்பிய ஒரு நினைவகப் பக்கம் Obituary சேவையை ஆரம்பித்துள்ளோம்.
ஒவ்வொரு ஆன்மாவும் அன்புடனும், கண்ணியத்துடனும், ஆத்மார்த்தமான நினைவுகளுடனும் போற்றப்பட வேண்டும் என்பதில் ஒன்இந்தியா ஆழ்ந்த நம்பிக்கை கொள்கிறது. நாம் இழந்தவர்களின் நினைவுகளை, காலம் கடந்தும் வாழும் காவியமாகப் பதிவுசெய்ய, நீங்கள் இப்போது உங்கள் மனதின் ஆழத்தில் குடிகொண்டிருக்கும் அன்பானவர்களுக்கு ஒரு பிரத்தியேக இரங்கல் பக்கத்தை உருவாக்கலாம். இது வெறுமனே ஒரு பக்கம் அல்ல; உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு நீங்கள் செலுத்தும் ஆத்மார்த்தமான பிரியாவிடை.

இந்த அஞ்சலிப் பக்கத்தின் வழியாக, மறைந்த ஆன்மாக்களுக்கு உங்கள் இதயத்தின் அஞ்சலியைச் செலுத்தலாம். நீங்கள் விரும்பும் மொழியில், உங்கள் மனதின் உணர்வுகளையும், ஆழ்ந்த நினைவுகளையும் வார்த்தைகளில் வடித்துக்கொள்ளலாம். அது உங்கள் அன்பானவர்களுடனான இனிமையான நினைவுகளைப் பகிர்வதாக இருக்கலாம்; அவர்களின் இறுதிப் பயணத்தின் சடங்குகள் குறித்த தகவல்களைத் தெரிவிப்பதாக இருக்கலாம்; அல்லது நெருங்கிய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உங்கள் துயரச் செய்தியைப் பகிர்வதாக இருக்கலாம்.
ஒன்இந்தியாவின் இந்த உணர்வுபூர்வமான தளம், உங்கள் அஞ்சலியை இணையவெளியில் அழியாமல் பாதுகாத்து, காலம் கடந்தும் நினைவுகளின் சுடரை அணையாமல் காக்கும்.
என்ன செய்ய வேண்டும்?
உங்களது இரங்கல் செய்தியை உருவாக்கத் தேவையான பின்வரும் விவரங்களைத் தயார் நிலையில் வைத்திருங்கள்.
தேவைப்படும் விஷயங்கள் (கட்டாயம்): மறைந்தவரின் முதல் பெயர், கடைசிப் பெயர், இறந்த தேதி மற்றும் இடம் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். மாநிலம்/பிரதேசம் ஆகிய விவரங்களைச் சேர்ப்பது விருப்பமானது.
தேவைப்படும் பிற விஷயங்கள் (கட்டாயமல்ல, விரும்பினால் கொடுக்கலாம்): பிறந்த தேதி, பிறந்த இடம், மதம், குடும்ப விபரங்கள் (பெற்றோர், மனைவி, குழந்தைகள்), கல்வி மற்றும் தொழில் பற்றிய தகவல்களும் தேவை.
இறந்தவரின் புகைப்படம் இருப்பது அவசியம். நீங்கள் எவ்வளவு விவரங்களைச் சேர்க்கிறீர்களோ, அந்த அளவுக்கு இரங்கல் செய்தி தனித்துவமாக இருக்கும்.
இரங்கல் செய்தியை எவ்வாறு உருவாக்குவது?
* oneindia.com வெப்சைட் செல்லுங்கள். அதிலுள்ள, Obituary (இரங்கல்) பிரிவுக்குச் செல்லுங்கள்.
* தேவையான விவரங்களை நிரப்ப அங்கே உள்ள சுய உதவி படிவத்தைப் பயன்படுத்தவும்.
* தீம்கள், இசை, புகைப்படங்கள் மற்றும் பிற தகவல்களுடன் உங்கள் அஞ்சலியை நீங்கள் வடிவமைக்கலாம்.
* இறுதிச் சடங்குகள் அல்லது நினைவுக் கூட்டங்களுக்கான நேரம் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அழைப்பிதழ்களைச் இதில் இணைக்கலாம். எல்லா விவரங்களையும் நிரப்பிய பின் செய்தி வெளியிடலாம்.
உங்கள் அன்பானவர்களுக்கு நீங்கள் அளிக்கும் பிரியாவிடை!
உங்களுடன் வாழ்ந்தவர்களுக்கும், மறைந்துவிட்ட அன்பானவர்களுக்கும், உறவினர்களுக்கும் நீங்கள் அளிக்கும் பிரியாவிடையாக இது இருக்கும். பல நாடுகள் கடந்தும் எளிதாக உங்கள் இரங்கல் செய்திகள் சென்று சேரும் விதமாக இந்த அஞ்சலி செய்தியை வடிவமைத்துள்ளோம். உலகின் எந்த மூலையிலிருந்தும் ஒருவருக்கொருவர் இந்த இரங்கல் அஞ்சலியை பார்க்க முடியும், பங்கேற்க முடியும். உங்கள் மனதின் வாஞ்சையை அஞ்சலியாக வெளிப்படுத்துங்கள்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications