Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீ பத்தினின்னா நெருப்பில் கையை விடு.. கொலை வெறி மாமியார்.. நடுங்கி போன மதுரா

பத்தினி என்பதை நிரூபிக்க மருமகளை நெருப்பில் மாமியார் கைவிட சொன்னார்.

Subscribe to Oneindia Tamil

மதுரா: யார் சொன்னாங்க சதி எனும் உடன்கட்டை ஏறுதல் நாட்டை விட்டே போயிடுச்சுன்னு??

இன்னமும் மருமகளுக்கு வாய்த்த சில கிறுக்கு பிடித்த மாமியார்களிடம் இந்த பழக்கம் ரொம்பவே இருக்கிறது!! நல்லவேளை நம்ம ஊர்ல இல்லை. உத்திரபிரதேசத்தில் மதுரா என்ற ஊரில் கிட்டத்தட்ட சதி போலவே ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

வரதட்சணை கொடுமை

வரதட்சணை கொடுமை

சுமனி என்கிற பெண்ணுக்கும், ஜெய்வீர் என்பவருக்கும் கல்யாணம் ஆகி 6 மாசந்தான் ஆகுது. ஆனாலும் வரதட்சணை கொடுமை தாண்டவமாடி சுமனியை ரொம்பவே பாடுபடுத்தி எடுத்து விட்டது. புருஷனும், மாமியாரும் சொல்ல முடியாத கஷ்டங்களை எல்லாம் புதுசா கல்யாணம் ஆகி வந்த இளம்பெண் சுமனிக்கு கொடுத்து கொண்டே இருந்தார்கள்.

கத்தியில் கிழித்தார்கள்

கத்தியில் கிழித்தார்கள்

உண்மையிலேயே அவர்கள் சித்திரவதையை விவரிக்க முடியாத அளவுக்கு கொடுமைகளை தந்தார்கள். சுமனியின் உடம்பிலும் கையிலும் கத்தியை எடுத்து கிழிப்பது முதல் எல்லாமே செய்தார்கள் அம்மாவும், பிள்ளையும். எல்லாவற்றையும் பொறுத்து கொண்டும், தாங்கி கொண்டும் இருந்தார் சுமினி. உடம்பெங்கும் காயங்கள், வடுக்கள், தழும்புகள் என்று பரவி கிடந்தன.

எப்படி மறைப்பது?

எப்படி மறைப்பது?

முக்கியமாக அந்த மாமியாருக்கு கோபம் வரும்போதெல்லாம் சுமனி கையை இழுத்து பிடித்து கத்தியை பிடித்து கிழித்து விடுவதான் வேலையே. அதனால் சுமனியின் கையெல்லாம் காயங்களாகவே இருந்தன. உடம்பில் காயங்கள் இருந்தால் மறைக்கலாம். ஆனால் கைகளில் உள்ள காயங்களை எப்படி, எத்தனை நாளைக்குதான் மறைப்பது? யார் பார்த்தாலும் கைகளில் உள்ள காயங்கள் பளிச்சென தெரியதான் செய்யும். அப்படி தெரிந்தால், என்ன, ஏதென்று கேட்டுவிட்டால் தங்களது வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளங்கள் ஏறிவிடும் என்பதை நினைத்து மாமியார் திணறினார்.

மந்திரவாதி

மந்திரவாதி

அதற்காக ஒரு மந்திரவாதியை சந்தித்து ஐடியா கேட்டு வந்தார். அதன்படி, சம்பந்தமே இல்லாமல் சுமனி மீது ஒரு பழியை சுமத்தினார். அதாவது சுமனியின் நடத்தை சரியில்லை என்று ஒரே போடாக போட்டார். இதை மகனையும் நம்ப வைத்தார். ஏற்கனவே உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் ரொம்பவே பாதிக்கப்பட்ட சுமனி இந்த அபாண்டத்தினால் இன்னமும் நிலைகுலைந்து போய்விட்டார். தன்னை மீறி அழ தொடங்கினர் சுமனி. உடனே மாமியார் வீட்லிருந்த விறகு கட்டைகளை எல்லாம் குவியலாக போட்டு தீயிட்டு கொளுத்தினார்.

மாமியார் ஐடியா

மாமியார் ஐடியா

தீ மளமளவென எரிய தொடங்கியது. அப்போது சுமனியை கூப்பிட்ட மாமியார், "நீ பத்தினியா? நீ பத்தினி என்பது உண்மைன்னா இந்த நெருப்பில கையை விடு பார்க்கலாம்" என்றார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுமனி மறுத்துள்ளார். இதனால் மாமியாருக்கு கோபம்தான் அதிகமானது. நெருப்பில் கையை விட்டுவிட்டால், சுமனி கை முழுவதும் வெந்துவிடும், ஏற்கனவே இருக்கும் காயங்களும் மறைந்துவிடும் என்று போட்ட பிளான் எல்லாம் வீணாகிறதே என்று ஆத்திரம் அடைந்தார்.

இருவரையும் விடவில்லை

இருவரையும் விடவில்லை

அதனால் சுமினியிடம், நீ கையை நெருப்பில் விடும்போது உன் கை சுடவில்லை என்றால் நீ பத்தினி, ஆனால் கைகள் எரிந்து சூடு தெரிந்தால் நீ பத்தினி இல்லை" என்றார். இதை கேட்டு திடுக்கிட்ட சுமினி, இதற்கு மேல் இவர்களை விட்டால் சரி கிடையாது என்று நினைத்து நேராக போலீஸ் ஸ்டேஷன் போய் விட்டார். மாமியார், புருஷன் என 2 பேரையும் விடவில்லை சுமினி. இருவர் மீதுமே புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+