டவ்-தே புயல்.. நாளை மறுநாள் காலை குஜராத்தின் துவாரகை அருகே கரையை கடக்கிறது!
அகமதா: அரபிக் கடலில் மையம் கொண்டிருக்கும் டவ்-தெ புயல் நாளை மறுநாள் குஜராத் அருகே கரையை கடக்கிறது. இதனையடுத்து குஜராத் மாநில கடலோர பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன.
Recommended Video
அரபிக் கடலில் லட்சத்தீவுகளுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் உருவானது.

டவ்-தே புயல் அரபிக் கடலில் மையம் கொண்டது முதலே கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கேரளாவில் மழைநீர் ஒருபக்கம், கடல் நீர் இன்னொரு பக்கம் என கடலோர மாவட்டங்கள் பெரும் பரிதவிப்புக்குள்ளாகி உள்ளன.
இன்று அதிகாலை 2.30 மணி நிலவரப்படி கோவாவில் இருந்து தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவிலும் மும்பைக்கு தெற்காக 490 கி.மீ தொலைவிலும் குஜராத்தின் வேரவல்லில் இருந்து 730 கி.மீ. தொலைவிலும் இந்த டவ்-தே புயல் நிலை கொண்டிருக்கிறது. இந்த டவ்-தெ புயல் நாளை தீவிர புயலாகவு பின்னர் அதிதீவிர புயலாகவும் வலுவடைய உள்ளது.

டவ்-தே புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. டவ்-தே புயலானது குஜராத்தின் துவாரகை அருகே நாளை மறுநாள் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications