For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி: டென்மார்க் பெண்ணை பலாத்காரம் செய்த இருவர் கைது- 4 பேர் தலைமறைவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ஹோட்டலில் டென்மார்க் பெண்ணை பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நான்கு பேர் தலைமறைவாகிவிட்டனர்.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் கடந்த 1-ந் தேதி டெல்லி வந்தார். சுற்றுலா வழிகாட்டியாக இருந்து வரும் அவருக்கு வயது 51. டெல்லியில் அவர் பகர்கஞ்ச் பகுதியில் உள்ள ஓட்டல் அமெக்ஸ் இன்னில் தங்கி இருந்தார்.

திங்களன்று அவர் இந்தியா கேட் அருகே உள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு சென்றிருந்தார். மாலை 4 மணிக்கு வெளியில் வந்த அவருக்கு ஓட்டலுக்கு திரும்பிச் செல்ல வழி தெரிய வில்லை.

கன்னட் பகுதியில் தவித்துக் கொண்டிருந்த அவரை 6 பேர் கும்பல் ரெயில்வே ஆபீசர்ஸ் கிளப் பின் பகுதியில் உள்ள மைதானத்துக்கு கடத்திச் சென்றது. அங்கு கத்தியை காட்டி மிரட்டி 6 பேரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர்.

இரவு 8 மணிக்கு அவர்களிடம் இருந்து விடுபட்ட அந்த பெண் ஒரு ரிக்ஷாவில் ஏறி ஓட்டலுக்கு திரும்பினார். பிறகு டென்மார்க் தூதர் உதவியுடன் போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன் பேரில் 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். டென் மார்க் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்தனர். அதை ஏற்க மறுத்த அந்த பெண் புதன்கிழமை காலை விமானத்தில் டென்மார்க் புறப்பட்டு சென்று விட்டார்.

இதற்கிடையே டெல்லியில் டென்மார்க் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வே போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இதையடுத்து டெல்லி போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி டென்மார்க் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரில் 2 பேரை கைது செய்தனர். அவர்கள் பெயர் ராஜா மற்றும் மகேந்தர் என்று தெரிய வந்துள்ளது. மற்ற 4 பேரும் தலைமறைவாக உள்ளனர்.

English summary
A 51-year-old Danish tourist was allegedly robbed and gang-raped at knife-point near New Delhi railway station in the heart of the national capital by around six men, in a grim reminder of the 13-month-old shocking incident here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X