ஒரு நாள் மட்டும் ரெஸ்ட்.. வீல்ச்சேரில் அமர்ந்தவாறு பேரணியில் பங்கேற்கும் மம்தா.. தொண்டர்கள் உற்சாகம்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து திரும்பிய மம்தா பானர்ஜி, இன்று வீல் சார் அமர்ந்தவாறே பேரணி ஒன்றில் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் இருந்து போட்டியிட முடிவு செய்தார்.

அவர் நந்திகாரம் தொகுதியைத் தேர்வு செய்ய முக்கிய காரணம் இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் ஐக்கியமான சுவேந்து அதிகாரி இங்கிருந்துதான் போட்டியிடுகிறார். அவரே எதிர்த்தே நந்திகாரம் தொகுதியில் களமிறங்குகிறார் மம்தா.

மருத்துவமனையில் மம்தா

மருத்துவமனையில் மம்தா

கடந்த புதன்கிழமை நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தார். அன்று மாலை பிரச்சாரத்தின்போது, திடீரென்று காலில் காயமடைந்த மம்தா பானர்ஜி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு நந்திகிராமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் கொல்கத்தாவிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

வைலான வீடியோ

வைலான வீடியோ

மருத்துவமனையில் காலில் பெரிய கட்டுடன் மம்தா சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் முதலில் வெளியானது. அதைத்தொடர்ந்து வீடியோ ஒன்றையும் மம்தா வெளியிட்டிருந்தார். அதில் தனக்கு கை, கால் மற்றும் நெஞ்சு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இருப்பினும், இரண்டு மூன்று நாட்களில் தேர்தல் பணிகளை மீண்டும் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் உருக்கமாக பேசியிருந்தார்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

இதைத்தொடர்ந்து, மருத்துவமனையிலிருந்து விடு வெள்ளிக்கிழமை இரவு மம்தா திரும்பினார். வாடிய முகத்துடன், வீல் சாரில் அமர்ந்தபடி மம்தா பானர்ஜி அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. தேர்தல் பணிகள் இருப்பதால் மம்தா கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் அவரை முன்கூட்டியே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து நேற்று ஒரு நாள் மட்டும் அவர் வீட்டில் ஓய்வு எடுத்தார்.

வீல் சாரில் அமர்ந்து பிரச்சாரம்

வீல் சாரில் அமர்ந்து பிரச்சாரம்

இந்நிலையில், இன்று அவர் மீண்டும் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார். இன்று மதியம் கொல்கத்தாவில் நடைபெறும் மாபெரும் பேரணியில் மம்தா பானர்ஜி கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவருக்குக் கணுக்கால் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை. இதனால் அவர் வீல் சாரில் அமர்ந்தபடியே இன்றைய பேரணியில் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+