”கரஸ்” மூலம் படித்தவர்களுக்கும் இனி வேலை உண்டு- மத்திய அரசின் புதிய அரசாணை!
டெல்லி: திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வியில் வழங்கப்படும் அனைத்து பட்டம் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்படிப்புகளுக்கு செல்லத்தக்கவை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்கலைக்கழக மானிய குழுவான யு.ஜி.சி அனுமதியுடன் அண்ணாமலை பல்கலைக்கழகம் உட்பட சில பல்கலைகளில் 1979 முதல் திறந்த நிலை மற்றும் தொலைதுார கல்வியில் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
துவக்கத்தில் இந்த முறையில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு தரப்பட்டதோடு உயர்கல்வி கற்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

உயர்கல்வி மறுப்பு:
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் திறந்தநிலை பல்கலையால் வழங்கப்பட்ட பிளஸ் 2 படிக்காமல் நேரடி பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது.

கடுமையாக பாதிப்பு:
பின் பிளஸ் 2 முடித்து திறந்தநிலை படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டது. இதனால் பிளஸ் 2 படிக்காமல் நேரடி இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்விக்கு செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பட்டங்கள் செல்லும்:
இந்நிலையில் மத்திய அரசு இரு தினங்களுக்கு முன் புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் திறந்த நிலை பல்கலையின் பட்டப்படிப்புகள் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் அரசின் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்விக்கு செல்லத்தக்கவை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த அறிவிப்பால் திறந்தநிலை படிப் பில் பட்டம் பெற்ற லட்சக்கணக்கானோர் அரசு வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய நம்பிக்கை பெற்றுள்ளனர்.

அரசாணை சொல்வது என்ன:
கடந்த 1956ம் ஆண்டு யு.ஜி.சி சட்டப்பிரிவு - 3 இன் படி நடத்தப்படும் நிகர்நிலை பல்கலை மத்திய மாநில அரசின் சட்டப்படி துவங்கப்பட்ட பல்கலைகளில் யு.ஜி.சி அனுமதி பெற்று வழங்கப்பட்ட அனைத்து பட்டங்கள் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் அனைத்து வகை அரசு வேலைவாய்ப்புக்கும் தானாகவே செல்லத்தக்கவை.

தெளிவாக இல்லை:
மத்திய அரசின் உத்தரவுப்படி திறந்த நிலை கல்வியில் பெற்ற பட்டங்கள் வேலைவாய்ப்புக்கு செல்லத்தக்கவை என்றாலும் எப்போது முதல் வழங்கப்பட்ட பட்டங்கள் என்பது அரசாணையில் தெளிவாக இல்லை. அதனால் பிளஸ் 2 முடிக்காமல் நேரடியாக பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இந்த அரசாணை பொருந்துமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications