காஷ்மீர் காவல் நிலையத்தில் வெடித்து சிதறிய வெடிபொருட்கள்.. பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு! என்ன நடந்தது?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள நவ்காம் காவல் நிலையத்தில் நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்து சிதறின. இதில் உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் குழுவினர் ஆவர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள நவ்காம் என்ற காவல் நிலையமானது, காஷ்மீர் உள்பட பல மாநிலங்களில் பயங்கரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி உமரின் கூட்டாளிகளை கைது செய்தபோது அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் உள்பட பல்வேறு வகையான வெடிப்பெருட்கள் கூட இந்த போலீஸ் நிலையத்தில் தான் வைக்கப்பட்டிருந்தது.

நேற்று இரவு இந்த காவல் நிலையத்தில் இருந்து திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அதாவது அங்கிருந்த வெடிபொருட்கள் வெடித்து தீப்பிழம்பு பல அடி உயரத்திற்கு எழுந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தியை அணைத்தனர். கூடுதல் போலீசாரும் அங்கு வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தில் முதலில் 8 பேர் பலியானதாக கூறப்பட்டது. தொடந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்து பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் காவல் நிலைய வெடிவிபத்தி பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 25 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதல்கட்ட விசாரணையில் விபத்து என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதாவது, டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி உமரின் கூட்டாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் உள்பட பல்வேறு வகையான வெடிப்பெருட்கள் இந்த போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இரவில் இது தொடர்பாக தடயவியல் குழுவினர் மற்றும் போலீசார் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக இது நடந்திருக்க கூடும் என தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் இந்திய ராணுவத்தின் 92 பேஸ் மருத்துவமனைக்கும், ஷேர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கும் (SKIMS) கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த உயர் காவல்துறை அதிகாரிகள் நவ்காமுக்கு விரைந்துள்ளனர். அப்பகுதி காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள் உதவியுடனும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications