ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்த காது கேளாத, வாய் பேச முடியாத குஜராத் பிச்சைக்காரர்
அகமதாபாத்: காது கேட்க, வாய் பேச முடியாத பிச்சைக்காரர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்காக உளவு பார்த்தது குஜராத் மற்றும் பஞ்சாப் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் அஸ்லாம் பதான். காது கேட்க, வாய் பேச முடியாத அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ராஜ்ஜோட்டில் பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி அவர் பஞ்சாப் மாநிலம் அம்பாலாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை செய்ததில் அவருக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. பதானிடம் இருந்து பைனாகுலர், செல்போன், குஜராத்தில் உள்ள விமானப்படை தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களின் வரைபடம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பதான் அகமதாபாத்தில் உள்ள ஐஎஸ்ஐ உளவாளிக்கு தகவல் அளித்து வந்துள்ளார். அவர் எப்படி ராஜ்கோட்டில் இருந்து அம்பாலா வந்தார் என்பது போலீசாருக்கு குழப்பமாக உள்ளது. பதானிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போனில் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்களின் எண்கள் உள்ளன.
அந்த எண்கள் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத்தில் கடை வைத்துள்ளவர்களின் எண்கள். பதானிடம் விசாரணை நடத்த குஜராத்தைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு பிரிவு படையினர் பஞ்சாப் சென்றுள்ளனர்.
காது கேட்க, வாய் பேச முடியாத பிச்சைக்காரரை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் என்று ஐஎஸ்ஐ நினைத்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications