மூணாறு நிலச்சரிவு- மேலும் 3 உடல்கள் மீட்பு- உயிரிழப்பு எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
இடுக்கி: மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
மூணாறு பெட்டிமுடி பகுதியில் அண்மையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தமிழக தொழிலாளர்கள் உள்ளிட்ட 80க்கும் அதிகமானோர் மண்ணோடு மண்ணாக புதையுண்டனர்.

தொடர் மழை காரணமாக நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நிலச்சரிவில் புதையுண்டு கிடந்த மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதனால் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இன்னமும் 9 பேரின் நிலைமை என்னவென தெரியவில்லை. சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட ரேடாரின் துணையுடன் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications