இமாச்சல பிரதேச நிலச்சரிவு.. பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்வு.. பீதியில் மக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்லா; இமாச்சல பிரதேச நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாண்டி பகுதியில் நேற்றிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் மாண்டி-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகள் மற்றும் வாகனம் சுமார் 800 மீட்டர் பள்ளத்தில் உருண்டு விழுந்தது.

Death toll rises to 46 in Himachal Pradesh landslide

இந்த திடீர் நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தொடர்மழையால் மீட்புப் பணிகள் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டன. தொடர்ந்து மீட்புப் பணியில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். அப்போது, நிலச்சரிவில் சிக்கியிருந்த 15 உடல்கள் மீட்கப்பட்டன.

இதனிடையே, நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய் உதவித்தொகையை அம்மாநில முதல்வர் அறிவித்தார். இந்நிலையில், மாண்டி நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அங்குப் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Forty Six were killed in landslide in Himachal Pradesh's Mandi district.
Please Wait while comments are loading...