டெல்லி 11 பேர் மர்ம மரணம்.. அமானுஷ்ய கடிதத்தை யார் எழுதியது?.. விலகாத பல மர்மங்கள்!

டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அமானுஷ்யமான கடிதம் ஒன்று சிக்கி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டெல்லி 11 பேர் தற்கொலை..வீடியோ

    டெல்லி: டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அமானுஷ்யமான கடிதம் ஒன்று சிக்கி இருக்கிறது. இதை யார் எழுதி இருப்பார்கள் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

    டெல்லி புராரி பகுதியில் நேற்று ஒரு வீட்டிலிருந்து 11 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதில் போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.அந்த வீட்டில் உள்ளே 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

    இவர்கள் வீட்டில் நிறைய கடிதங்கள், டைரிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. எப்படி தற்கொலை செய்தால் சொர்க்கத்தை அடையலாம், என்ன செய்தால் மோட்சம் கிடைக்கும் என்றெல்லாம் நிறைய குறிப்புகள் இருந்துள்ளது.

    கையெழுத்து

    கையெழுத்து

    இந்த கடிதம் மற்றும் டைரியில் உள்ள கையெழுத்துக்களை போலீஸ் விசாரித்து வருகிறது. அந்த கையெழுத்து வீட்டில் இருக்கும் எந்த நபரின் கையெழுத்துடன் ஒன்றிப் போகிறது என்று சோதனை செய்கிறார்கள். அப்படி கையெழுத்து ஒரே மாதிரி இல்லையென்றால், வேறு யார் அதை எழுதி இருப்பார்கள் என்பதையும் விசாரிக்க இருக்கிறார்கள்.

    சிசிடிவி பதிவு

    சிசிடிவி பதிவு

    இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சிசிடிவி கேமரா பதிவுகளை சோதித்து வருகிறது. இந்த மர்ம மரணம் சனிக்கிழமை இரவில் இருந்து ஞாயிற்றுக் கிழமை காலைக்குள் நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த நேரத்தில் அந்த வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்லவில்லை. சாப்பாடு டெலிவரி பாய் மட்டும் சாப்பாட்டை வீட்டிற்கு வெளியே இரவு 10.30 மணிக்கு வைத்துவிட்டு சென்றுள்ளார்.

    இணையதள தேடல்

    இணையதள தேடல்

    அதேபோல் இவர்களின் இணையதள தேடல் விவரங்களையும் போலீஸ் சல்லடை போட்டு தேடி வருகிறது. இவர்கள் கடிதத்தில் விசித்தரமான விஷயம் இருப்பதால் அதை இணையத்தில் இருந்து தெரிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதால் அதை சோதனை செய்து வருகிறார்கள். அதே சமயம் நேரடியாக எதாவது ஒருவரும் மோட்சம், சாந்தி என்று கற்றுக் கொடுத்திருக்க வாய்ப்புண்டு. அதனால் அந்த நபரையும் தேடி வருகிறார்கள்.

    இன்னொரு வாய்ப்பு

    இன்னொரு வாய்ப்பு

    இந்த மரணத்தில் போலீசுக்கு இன்னொரு சந்தேகமும் உள்ளது. அந்த 11 பேரில் இன்னும் சில நாட்களில் ஒரு பெண்ணுக்கு மட்டும் திருமணம் ஆக வேண்டி இருந்துள்ளது. ஆனால் திருமணத்திற்கு முன் இந்த மர்ம மரணம் நிகழ்ந்துள்ளது. இதனால் அந்த நிச்சயிக்கப்பட்ட நபரை போலீஸ் விசாரிக்க முடிவு செய்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+