டெல்லி பா.ஜ.க. தோல்விக்கு நரேந்திர மோடியே காரணம்: போட்டுத் தாக்கும் அன்னா ஹசாரே
ரலேகான் சித்தி(மகாராஷ்டிரா): டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்தற்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே மிகக் கடுமையாக சாடியுள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தல் தொடர்பாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ள கருத்து:
நரேந்திர மோடிக்கு ஆதரவாக அலை வீசுவதாக சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை.
ஊழலை ஒழிப்போம் என்று நரேந்திர மோடி உறுதியளித்தார். ஆனால் எதுவும் நடைபெறவில்லை. நரேந்திர மோடி மீதான மக்கள் நம்பிக்கை அழிந்து போய்விட்டது.

பாரதிய ஜனதாவின் தோல்விக்கு கிரண்பேடி காரணம் அல்ல.. கிரண்பேடி பாரதிய ஜனதாவில் இணைந்தது தவறு. நான் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.
டெல்லி முதல்வராகியிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவாலும், பாரதிய ஜனதாவின் முதல்வர் வேட்பாளருமான கிரண்பேடியும் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications