டெல்லி - பைசாபாத் ரயில் தடம்புரண்டு விபத்து- 70 பேர் காயம்- அவசர உதவி எண்கள் அறிவிப்பு
டெல்லி: டெல்லி - பைசாபாத் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் இருந்து பைசாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த 14206 என்ற எக்ஸ்பிரஸ் ரயில், நேற்றிரவு உத்திரப்பிரதேசம் ஹபூர் மாவட்டத்தில் கார்க்முக்தேஷ்வர் பகுதியில் எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதால், சுமார் 70 பயணிகள் காயமடைந்தனர்.

தகவல் அறிந்த மீட்புக் குழுவினரும், ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மீரட், காஸியாபாத் மற்றும் ஹபூர் பகுதி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தால், அந்த மார்க்கத்தில் செல்ல வேண்டிய 9 ரயில்கல் ரத்து செய்யப்பட்டது. 39 ரயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.
தண்டவாளம் சரிசெய்யப்பட்டு இன்று மாலை 5 மணிக்குள் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து சீராகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விபத்தில் காயமடைந்தவர்கள் பற்றிய விபரங்களைப் பெற அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மீரட் மாவட்ட மருத்துவமனை 0-9410609434 என்ற அவசர உதவி எண்ணை அளித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications