டெல்லி பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு: கொந்தளிக்கும் குற்றவாளிகளின் வக்கீல்

டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் மைனர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் மைனருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. மீதமுள்ள 4 பேரில் பேருந்து டிரைவர் ராம் சிங் கடந்த மார்ச் மாதம் திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இதையடுத்து மீதமுள்ள நான்கு பேரான வினய் சர்மா, அக்ஷய் குமார், பவன் குப்தா மற்றும் முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை கேட்டதும் தங்கள் மகளுக்கு நீதி கிடைத்த மகிழ்ச்சியில் மாணவியின் பெற்றோர் கண்ணீர்வடித்தனர்.
அதே சமயம் தீர்ப்பை கேட்டு அந்த 4 குற்றவாளிகளும் அழுதனர்.
இந்நிலையில் இது குறித்து அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ஏ.பி. சிங் கூறுகையில்,
இந்த தீர்ப்பு நியாயமற்றது, பாராபட்சமானது. அரசியல் அதிகாரத்தின் தலையீட்டால் வழங்கப்பட்டது. பொய்மையே வெல்லும் என்பதற்கு இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டு. தண்டனை வழங்கப்பட்டவர்கள் அப்பாவிகள். சம்பவம் நடந்த அன்று அக்ஷய் குமார், வினய் சர்மா மற்றும் பவன் குப்தா ஆகியோர் அந்த இடத்திலேயே இல்லை. அக்ஷய் டெல்லியிலேயே இல்லை. முகேஷ் சம்பவ இடத்தில் இருந்திருந்தபோதும் எதுவும் செய்யவில்லை.
இந்த குற்றத்தை தாங்கள் தான் செய்தோம் என்று அவர்களை போலீசார் மிரட்டி ஒப்புக்கொள்ள வைத்துள்ளனர். அவர்கள் ஏழைகள் தானே. யாரும் கேட்க மாட்டார்கள் என்று போலீசார் இவ்வாறு செய்துள்ளனர்.
இன்று முதல் 2 மாதங்களுக்கு எந்த கற்பழிப்பு வழக்குகளும் பதிவாகாவிட்டால் நான் இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மாட்டேன். ஆனால் கற்பழிப்பு வழக்கு பதிவானால் நிச்சயம் மேல் முறையீடு செய்வேன் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications