டெல்லியில் 'எஸ்மா' அமல்! போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக்கை ஒடுக்க கேஜ்ரிவால் அதிரடி!!
டெல்லி: டெல்லியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்க எஸ்மா சட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமல்படுத்தியுள்ளார்.
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அரசுப் போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநர் அசோக்குமார் என்பவர் முன்ட்கார் பகுதியில் பைக்கில் வந்த இளைஞர் மீது லேசாக மோதினார். இதில் ஆந்திரமடைந்த இளைஞர் பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கினர். இதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.

இதனைக் கண்டித்து டெல்லி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த ஓட்டுநர் அசோக்குமாரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு கோரினர்.
இந்த வேலை நிறுத்தத்தால் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிக்குச் செல்வோர் பெரும் அவதிக்கு ஆளாயினர். அரசு பேருந்துகளை மட்டுமே நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் செலுத்திச் செல்கின்றனர்.
இதையடுத்து டெல்லி அரசு பேருந்து ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தை பிரயோகிக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் அத்தியாவசிய சேவை பராமரிப்பு சட்டமான எஸ்மாவை நடைமுறைப்படுத்த முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவிட்டார். இந்த சட்டத்தின் கீழ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்து ஊழியர்கள் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications