2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீடு: ஆ.ராசா, கனிமொழி உள்பட 19 பேருக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்பட 19 பேருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
Recommended Video

டெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 19 பேருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அமலாக்கத் துறையும், சிபிஐயும் மேல்முறையீடு செய்ததை அடுத்து மேற்கண்டவாறு நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டதாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

சுமார் 6 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கு விசாரணையில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 2ஜி வழக்கில் இருந்து அனைவரையும் விடுதலை செய்வதாக டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பளித்தார்.
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்பட 19 பேரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கடந்த 19-ஆம் தேதி அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் சிபிஐயும் மேல்முறையீடு செய்தது. இந்த இரு வழக்குகளும் இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 2ஜி வழக்கில் புலனாய்வு அமைப்புகளால் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்பட 19 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இரு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை மே 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.233 கோடி மதிப்பிலான சொத்தை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications