டெல்லி கேதார்நாத் கோவில்: சனாதன தர்மத்தை இழிவுபடுத்திய உத்தரகாண்ட் பாஜக முதல்வர்-காங்கிரஸ் ஆவேசம்!
டேராடூன்: டெல்லியில் கேதார்நாத் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டது அம்மாநிலத்தில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. இமயமலை கேதார்நாத் கோவிலுக்கு போட்டியாக டெல்லியில் கேதார்நாத் கோவில் கட்டுகிற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் புஷ்கர்சிங் தாமி, சனாதன தர்மத்தையும் வேதங்களையும் இழிவுபடுத்திவிட்டதாக காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைப் பகுதியில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை இந்துக்களின் முதன்மையான புனித தலங்களாகும். இந்துக்கள் இந்த 4 புனித தலங்களுக்கும் ஒருமுறையேனும் சென்று தரிசனம் செய்வதை பெரும்பேறாக கருதுகின்றனர்.

இமயமலையின் நடுவே இருக்கும் இந்த 4 புனித தலங்களும் கடுமையான பனி கொட்டும் காலங்களில் மூடப்பட்டு இருக்கும். அதாவது ஆண்டுக்கு 6 மாதங்கள் மூடப்பட்டும் 6 மாதங்கள் திறக்கப்பட்டும் இருக்கும். இமயமலைப் பகுதி என்பதால் அவ்வளவு எளிதாக இந்த 4 புனித தலங்களுக்கும் சென்று வழிபாடு நடத்தவும் முடியாது. பாதயாத்திரையாக, குதிரைகளிலும் சென்றுதான் இங்கு வழிபாடு நடத்தவும் முடியும்.
இந்த நிலையில்தான் டெல்லியில் புதியதாக கேதார்நாத் கோவில் கட்டப்பட இருக்கிறது. வடமேற்கு டெல்லியில் கட்டப்பட இருக்கிற இந்த கேதார்நாத் கோவில் அடிக்கல் நாட்டு விழா- பூமி பூஜையில் உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பங்கேற்றார். டெல்லியில் கேதார்நாத் கோவில் கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இமயமலை கேதார்நாத் கோவில் முன்பாக ஒன்று திரண்ட அர்ச்சகர்கள், சாதுக்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். ஜோதிர்மட சங்கராச்சாரியார் உள்ளிட்டோரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
மேலும் உத்தரகாண்ட் இமயமலை கேதார்நாத் கோவிலில் இருந்த 228 கிலோ தங்க நகைகள் மாயமாகிவிட்டதாகவும் இதை மறைக்கவே டெல்லி கேதார்நாத் கோவில் கட்டப்படுவதாகவும் ஜோதிர்மட சங்கரச்சாரியார் குற்றம் சாட்டியிருந்தார்.
தற்போது உத்தரகாண்ட் மாநில அரசியலில் இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. டேராடூனில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள் கரிமா மேஹ்ரா மற்றும் ஷீஸ்பால் பிஸ்த் ஆகியோர் இது தொடர்பாக கூறியதாவது: வேதங்களில் 4 சங்கராச்சாரியார்கள்தான் உள்ளனர். ஆனால் பாஜகதான் ஏராளமான புதிய சங்கரச்சாரியார்களை உருவாக்கியது. பாஜக கோவில் கட்ட வேண்டுமானால் குஜராத்தின் அக்ஷர்தாம் போல கட்டிக் கொள்ளலாமே.. கேதார்நாத் போல ஏன் கட்ட வேண்டும்? கேதார்நாத் கோவிலுக்கு என தனி சரித்திரம் உண்டு. கேதார்நாத் கோவில் தொடர்பாக இந்துக்களிடையே நம்பிக்கைகள் இருக்கின்றன. சனாதன தர்மத்தையும் வேதங்களையும் இழிவுபடுத்துகிற வகையில் கேதார்நாத் கோவில் டெல்லியில் கட்டப்படுகிறது. இதில் பாஜக அரசின் முதல்வர் புஷ்கர்சிங் தாமி பங்கேற்றது கண்டனத்துக்குரியது. இவ்வாறு காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications