For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி சட்டசபை நோட்டீஸ்

By Mathi
Google Oneindia Tamil News

Delhi legislative assembly serves notice to Arvind Kejriwal
டெல்லி: சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வென்றால் சட்டசபை கூட்டத்தை ராம்லீலா மைதானத்தில் நடத்துவோம் என்று அக்கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி டெல்லி சட்டசபை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தலில் தங்களின் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் வரும் டிச.29ந் தேதி ராம்லீலா மைதானத்தின் திறந்தவழியில் சட்டசபையை கூட்டி லோக்பால் மசோதா நிறைவேற்றுவோம் என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

அவரின் பேச்சுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உதம்நகர் எம்எல்ஏ முகேஷ்சர்மா புகார் அளித்திருந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இன்று டெல்லி சட்டசபை கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸை பெற்றுக்கொண்ட அவர், இதற்கு விளக்கம் அளிப்பது தொடர்பாக சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

English summary
The Delhi legislative assembly has slapped a breach of privilege notice on Aam Aadmi Party (AAP) chief Arvind Kejriwal for saying his party would pass the Jan Lokpal Bill at an “open assembly session” at the Ramlila Ground if it wins the state elections, Kejriwal said on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X