டெல்லி பரபர- ஜனாதிபதி- மோடி சந்திப்பு- அமைச்சரவை கூட்டம் ரத்து- மூத்த அமைச்சர்கள் திடீர் ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை திடீரென சந்தித்து பேசியது, பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் தனியே ஆலோசனை நடத்தியது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் என அடுத்தடுத்த நிகழ்வுகளால் டெல்லி அரசியல் வட்டாரங்கள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளன.

டெல்லியில் நேற்று திடீரெஜ ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு எதற்காக நடந்தது? என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் இந்த சந்திப்பு தொடர்பான படங்கள், ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டன.

modi

இதனைத் தொடர்ந்து பாஜக தலைவரான ஜேபி நட்டாவின் வீட்டில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.

மேலும் பிரதமர் மோடி தலைமையில் இன்று வழக்கமாக நடைபெறக் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டமும் திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பிரதமர் நரேந்திர மோடியின் வரும் 19-ந் தேதி காஷ்மீர் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் அடுத்தடுத்து அரங்கேறும் இந்த நிகழ்வுகளால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+