தினகரனின் புரோக்கர் சுகேஷை பெங்களூருக்கு அழைத்து வந்த டெல்லி போலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் பெங்களூரு அழைத்து வரப்பட்டுள்ளார்.

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு ரூ.60 கோடி வரை லஞ்சம் கொடுக்க முன் வந்துள்ளார். இதற்காக அவர் பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் முன்பணமாக ரூ. 10 கோடி கொடுத்துள்ளார்.

Delhi police bring Sukesh to Bengaluru

இது குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் டிடிவி தினகரனிடம் விசாரணைக்காக டெல்லிக்கு வருமாறு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

நாளை டெல்லிக்கு வருமாறு போலீசார் கூற தினகரனோ மூன்று நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார். இந்நிலையில் பெங்களூரில் வைத்து தான் தினகரன் தரப்பில் சுகேஷுக்கு பணம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் சுகேஷை டெல்லியில் இருந்து நேற்று இரவு பெங்களூருக்கு அழைத்து வந்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Delhi police have brought TTV Dinakaran's alleged middleman Sukesh Chandrasekhar to Bengaluru for investigation in the bribery case.
Please Wait while comments are loading...