குடியரசு தினத்தையொட்டி தேடப்படும் தீவிரவாதிகளின் போஸ்டர்களை ஒட்டிய டெல்லி போலீஸ்
டெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு தேடப்படும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்களை டெல்லி முழுவதும் போலீசார் ஒட்டியுள்ளனர்.
இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர் நேற்று மதியம் சன்டிகர் வந்தடைந்தார். அவரை வரவேற்க பிரதமர் நரேந்திர மோடி சன்டிகர் சென்றார்.
Delhi Police put posters of wanted terrorists ahead of Republic Day. pic.twitter.com/HB6lhzK91j
— ANI (@ANI_news) January 24, 2016 குடியரசு தின கொண்டாட்டத்தின்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஹாலண்டே, மோடி ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேடப்படும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்களை போலீசார் டெல்லி முழுவதும் ஒட்டியுள்ளனர். பொது இடங்களில் சந்தேகத்திற்கு இடமாக யாரையாவது பார்த்தாலோ அல்லது கேட்பாரற்று ஏதாவது பொருட்கள் கிடந்தாலோ உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
குடியரசு தின விழா கொண்டாடங்களை சீர்குலைக்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications