டெல்லி இஸ்லாமியர்கள் மீதான வன்முறை திட்டமிட்ட இனப்படுகொலை: மமதா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு
கொல்கத்தா: டெல்லியில் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை திட்டமிட்ட இனப்படுகொலை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சி.ஏ.ஏ. ஆதரவு என்ற பெயரில் வடகிழக்கு டெல்லியில் இஸ்லாமியர்கள் மீது குறிவைத்து வன்முறை தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இதில் 46 பேர் பலியாகி உள்ளனர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

நாட்டையே பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கும் இப்படுகொலை சம்பவங்கள், நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளன.
மேலும் கொல்கத்தாவில் நேற்று சி.ஏ.ஏ. ஆதரவு பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர், மத்திய அரசின் சட்ட திருத்தத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி விரைவில் அமையும். ஆகையால் மமதா பானர்ஜி கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.
இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியதாவது:
டெல்லியில் திட்டமிட்ட இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த இனப்படுகொலைக்காக பாஜக இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. இந்த நிலையில் மேற்கு வங்கத்தைக் கைப்பற்றுவோம் என்று வெட்கமே இல்லாமல் பேசி வருகின்றனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்கத்தில் நடத்திய பேரணியில் பங்கேற்ற பாஜகவின் கோலி மாரோ- துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள் என கோஷம் எழுப்பியுள்ளனர். இப்படியான கோஷம் எழுப்பியவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.
டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய, முழக்கங்களை எழுப்பிய பாஜக தலைவர்கள் இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை? இவ்வாறு மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications