என்ன ஒரு சாதனை, நோபல் பரிசு கொடுக்க வேண்டும்: மத்திய அரசை விமர்சித்த ப.சி.
டெல்லி: 1 சதவீத பழைய ரூபாய் நோட்டுகளே ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பண மதிப்பு நடவடிக்கைக்கு பிறகு பழைய ரூபாய் நோட்டுகளில் 1 சதவீதம் மட்டுமே ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை என்று ரிசர்வ் வங்கியின் 2016-17-க்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரான ப. சிதம்பரம் கூறியிருப்பதாவது,

சாதனையா?
1 சதவீத பழைய ரூபாய் நோட்டுகளே ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது. இது தான் கருப்பு பண ஒழிப்பின் சாதனையோ?

தோல்வி
இதற்கு தான் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டதா? இந்த நடவடிக்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்ததுடன் 104 அப்பாவி பொதுமக்களை பலி வாங்கிவிட்டது.

பிரதமர்
இந்த செயலுக்காக பிரதமர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பண மதிப்பு நடவடிக்கையின் பின்னால் இருந்த பொருளாதார நிபுணர்களுக்கு நோபல் பரிசு கொடுக்கும் அளவுக்கு தகுதி உள்ளது.

செலவு
பழைய நோட்டுக்கள் வங்கிக்கு திரும்பி வந்ததால் ரூ. 16 ஆயிரம் கோடி லாபமாம். ஆனால் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட ரூ. 21 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளனர் என்றார் ப. சிதம்பரம்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications